திருப்பூர் .அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பில் செரங்காடு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். செரங்காடு பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இம்முகாமில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் M.காதர்கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஜ்வான், செரங்காடு கிளை பொறுப்பாளர்கள் J.அப்துல் அக்கிம், J.நஸ்ருதீன், M.முகம்மது ஆசிப், B.அப்பாஸ், B.காதர் ஆகியோர் கலந்துகொண்டனர். மஜகவின் செயலவீரர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர் மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகி தோழர் மூர்த்தி அவர்கள் மஜகவின் மக்கள் நல பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த முகாம் ஏற்பாடுகளை செரங்காடு J.செளகத் அலி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 15/10/2017
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜகவின் கிளை செயலாளர் ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகுத்தார். நாச்சிகுளம் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வந்த ஜமாத்தார்கள் அனைவருக்கும் குவைத் பேரவையின் துணை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மன் அவர்களும், சமூக ஆர்வலர் நாச்சிகுளம் ரசீது அவர்களும் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர். இதில் மஜக தொண்டர்களும், ஜமாத்தார்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன் பெற்றனர். #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம்_கிளை 13/10/2017
பரங்கிப்பேட்டையில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
கடலூர்.அக்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம் (தெற்கு) பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று மஜக கிளை செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர், கிளை துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் பரங்கிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பரங்கிப்பேட்டை #கடலூர்_மாவட்டம்_தெற்கு 12.10.17
எடையூர்-சங்கந்தியில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.11., திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்க எடையூர்-சங்கந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். மஜக கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் தவுலத் பாட்சா, ஹமீது நபில், கலீல் ஜிப்ரான், நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை ஏற்றனர் இம்முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளக்க பிரச்சாரம் செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் சங்கந்தி அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிட தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #எடையூர்_சங்கந்தி #திருவாரூர்_மாவட்டம் 11.10.17
மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…
வேலூர்.அக்.08., வேலூர் மாநகரம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விருதம்பட்டு 15வது வார்டு கிளை சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்றது. இதில் கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், துணை செயலாளர்கள் அஸ்கர், நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை சரியாக 9-மணியளவில் நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் ஹாபீஸ் ஆசிப், முஹம்மத் ஆசிப், லதீப் மற்றும் மஜகவின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் 400 க்கும் அதிகமானோர் முகாமிற்கு வருகை தந்த நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 08.10.2017