இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன படுகொலைகள் துயரம் நிறைந்தவை. அதன் கண்ணீர் நினைவுகளை தமிழ் உலகம் ஆங்காங்கே ஆவணப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்று பேரழிவை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. அது போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணும் அந்த துயரத்தை கூறிக் கொண்டிருந்தது. நேற்று இரவோடு இரவாக இலங்கை அரசு அதை இடித்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த நினைவு தூணை மீண்டும் அதே இடத்தில் எழுப்பிடுவதே நியாயமான நடவடிக்கையாக இருக்கும். இவ்விஷயத்தில் இலங்கை அரசு பேரினவாத உணர்வோடு அணுகாமல், சிறுபான்மை தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 09.01.2021
அறிக்கைகள்
பாகிஸ்தானில் கோவில் இடிப்பு.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்!
பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் 1919-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலை அங்குள்ள மதவெறி கும்பல் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த அராஜகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து அவர்களை பாதுகாப்பதே ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் இது போன்ற வகுப்பு வாத போக்குகளை ஒடுக்குவது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பாகிஸ்தான் அரசு இச்சம்பவத்தை கண்டித்து, இப்பாதக செயலில் ஈடுபட்ட மதவெறியர்களை கைது செய்திருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம் பாகிஸ்தான் அரசே, அந்த கோயிலை மீண்டும் கட்டிக் கொடுத்து அங்குள்ள சிறுபான்மை இந்து சமுதாய மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாழ்படுத்தும் தீய சக்திகள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை வீழ்த்துவது மனித நேயம் உள்ள அனைவரின் கடமை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.01.2021
ஐஐடியில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை தரப்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு பிற்படுத்தப்பட்ட,, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு முறை இனி ஐஐடி களுக்கு தேவையில்லை என பரிந்துரைத்துள்ளது. மேலும் பேராசிரியர் பணியிடங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் பரிந்துரைத்துள்ளது. இது பரிந்துரையா? அல்லது வலதுசாரி குழு ஒன்றின் சதியா? என்பதை நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். இந்நாட்டில் உள்ள 97% மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் அம்மக்கள் நயவஞ்சகமாக ஒதுக்கப்படுவது சமூக அநீதியாகும். உயர் கல்வி நிறுவனங்களா? உயர் சாதி மையங்களா? என்ற கேள்வி எழும் முன்பு அங்கே அனைவருக்குமான சமூக நீதியை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை வேண்டும். இந்த உயர் கல்வி கூடங்களில் 97% இருக்கக் கூடிய சமூகங்களை சேர்ந்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், அதனால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் , அவை மர்ம தேசங்களாக இருக்கின்றன என்றும் கருத்துகள் நிலவும் நிலையில், அங்கே சமூகநீதியும், ஜனநாயகமும் நிலைநாட்டப்பட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்தியஅரசு திரும்பபெற வேண்டும்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு அது ரூ.660 ஆக அதிகரித்தது. தற்போது மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.710-க்கு விற்கப்படுகிறது. இது நடுத்த ஏழை மக்களின் அன்றாட வாழ்வின் மீது தொடுக்கும் தாக்குதல் ஆகும். ஏற்கனவே மானிய சிலிண்டர் பெறும் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகையை செலுத்தவில்லை என்று பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் விலையை உயர்த்தியது வேதனைக்குரியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் அதற்கேற்ப விலைக்குறைப்பு நடவடிக்கை எடுக்காமல், தற்போது பதினைந்து நாட்களில் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது எளிய மக்களை முடக்கும் செயலாகும். மத்திய அரசின் இந்த விலை உயர்வை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் இந்த விலை உயர்வை திரும்பப்பெற்று பழைய விலையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 17.12.2020
ஒரேநாடு ஒரேவானொலி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது! மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
ஜனவரி 2021 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்தும் நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. சென்னை , திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் நிலையங்களிலிருந்து வெளியான தமிழ் சேவை நிறுத்தப்பட்டு, சென்னை நிலையத்தை மையமாக வைத்து ‘ ஆகாசவாணி தமிழ்நாடு’ என்ற பெயரில் மட்டுமே நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நிலையங்கள் மையத்தொகுப்பிற்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்க முடியுமாம். இதே போல் பண்பலை அலைவரிசைகளும் ‘ ஆகாசவாணி தமிழ் ‘ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பப்படவிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவை துறைகளை ஒழித்துக்கட்டுவதின் தொடக்கமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இந்த புதிய ஏற்பாடு மாவட்ட வட்டாரங்களின் மொழி, பண்பாட்டு , வாழ்வியல் தனித்தன்மைகளை அழித்துவிட்டு, ‘ ஒரே நாடு ஒரே வானொலி ‘ என்ற ஒற்றையாக்கத்தில் போய் முடியும் அபாயத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் நிறைய அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் வேலையிழப்பை எதிர்கொள்கிறார்கள். அங்கு பணியாற்றும் பல தமிழ் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வட்டார நிலையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு