திண்டுக்கல்.ஜூலை.16: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு உட்பட்ட பிலாத் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (15/07/2017) பிலாத்து பகுதியில் பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. முன்னதாக மஜக கொடியை கிராம மக்களின் எழுச்சி முழக்கத்தோடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . M.நாசர் கொடி ஏற்றினார். பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மஜக மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது ஆகியோர் உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் பாஷா, அபி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் S.சுமதி, வடமதுரை ஒன்றிய செயலாளர் வேலுமணி, ஒன்றிய பொருளாளர் V.செல்வராஜ், வேடசந்தூர் ஒன்றிய பொருளாளர் பொன்னுச்சாமி, வடமதுரை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் J.ஜெரினா பேகம், மகளிர் அணி பொருளாளர் S.நாகலெட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் R.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் மரைக்காயர் சேட், S.சரவணன், S.ஜாபர், R.உமர் அலி, M.அனஸ் முஸ்தபா, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், A.சபியா பேகம், T.செல்வி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளளர் D.குனா உள்ளிட்டோர் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர். மஜக
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
திருச்சியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு..!
திருச்சி.ஜூலை.15., நேற்று திருச்சி மாவட்டம் காஜாமலை ஜே.கே நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக கட்சிகொடியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகளும், திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் நூற்றுக்கு மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருச்சி மாநகர் மாவட்டம். 14.07.2017
மஜக காஞ்சி வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்…! மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது பங்கேற்பு..!
சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று 11.07.17 மாலை 7மணி அளவில் குரோம்பேட்டையில் மாவட்ட செயலாளர் இல்லத்தில், மிக சிறப்பாக நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப், மாவட்ட துணை செயலாளர்கள் ஆலந்தூர்சலீம், தாம்பரம் ஜாஹிர், அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்டதிற்கு உட்பட்ட தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபத்தூர், கண்டோன்ட்மென்ட், குன்றத்தூர், பகுதி, நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உள்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com, மாநில செயலாளர் தைமியா அவர்களும், மாநில துனை செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இக்கூட்டதில் பேசிய மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கட்சியின் வளர்ச்சி, மற்றும் பணிகள் குறித்தும், மாநில செயலாளர் தைமியா அவர்கள் ஒழுக்கங்களை நாம் எப்படி பேன வேண்டும் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்தினார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING காஞ்சி வடக்கு. 11.07.2017
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!
கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ''இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும், மனிதஉரிமை - சமூக நீதி ஆர்வலர்களும் பங்குகொண்டது பெரும்மகிழ்ச்சியை தந்தது. அதிமுக, திமுக, மதிமுக, காங்ரஸ், தமாக, தேமுதிக, பாமக, விசிக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், SDPI நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குகொண்டு "சமூக நல்லிணக்கத்தை" பேசி கைத்தட்டளை வாங்கினர். நாம் ஒருதாய் மக்கள், மதவெறியை வீழ்த்த வேண்டும், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைவரின் வாயில் இருந்தும் கட்சி எல்லைகளை தாண்டி எதிரொலித்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்ச்சாகம் பொங்க பங்கேற்றனர். சால்வைகள் இல்லை, மாலைகள் இல்லை, அரசியல் சவடால்கள் இல்லை ஆனால் எல்லோரின் உணர்வுகளிலும் ஒற்றுமை இருந்தது. மேலும் சமூக சேவையில் பாடுபட்ட K.C.தம்பி (எ) அச்சா, அரிமா சங்க தலைவர் லட்சுமி நாராயணன் போன்றோர்க்கும் அகில இந்திய சிறுபான்மை நல
மரக்கன்று நடும் விழா மஜக பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் பங்கேற்பு…!
கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழிநுட்ப அணி, #MJK_IT_WING கடலூர் தெற்கு மாவட்டம். 09.07.2017