சென்னை.ஜூன்.18., கடந்த 16.06.2018 அன்று #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியின் சார்பில் ஐஸ் ஹவுஸ் லேடி வில்லிங்டன் பள்ளியில் முப்தி.உமர் சரீப் காசிமி அவர்கள் குத்பா உரையுடன் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிலால் அஹமது அவர்களுடன் சேர்ந்து மஜக பகுதி செயலாளர் சாகுல் ஹமீது, பகுதி பொருளாளர் ஜலாலுதீன், பகுதி துணை செயலாளர்கள், முஹம்மது அலி இஷாக்,சையத் ஜமால், பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சலீம், இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் தொழுகைக்கான ஏற்பாட்டை மாவட்ட செயலாளர் M.Y.பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோரின் வழிகாட்டுதலின் படி மிக சிறப்பாக செய்திருந்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர் NA.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்ட பொருளாளர் A.அமீர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு திடல் தொழுகையில் 800க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_IT_WING #IKP_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
IKP – இஸ்லாமிய கலாச்சார பேரவை
IKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..!
கடலூர்.ஜூன்.16., கடந்த 14-06-2018 அன்று இரவு 8:00 மணி அளவில் வளைகுடாவில் வசிக்கும் பரங்கிப்பேட்டை நகர மஜக உருப்பினர்கள் சார்பாக ஃபித்ரா நிதி வசூல் செய்யப்பட்டு நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) மற்றும் மஜக நிர்வாகிகள் மூலமாக டில்லிசாஹிப் தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வளைகுடா நிர்வாகிகளான ஹாஜா மக்தும், அப்துல்ரஜ்ஜாக், ஹாசிம், ஷேக், அரசாத் மற்றும் நகர மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு வினியோகம் செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_பரங்கிப்பேட்டை_நகரம் #16.06.2018
அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர். மஜக இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP குடியாத்தம் நகரம் சார்பாக ஏழை எளியோருக்கு பித்ரா வழங்கும் நிகழ்வு
வேலூர்.ஜூன்.15.,பித்ரா எனப்படுவது நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்தலாகும், இதன் முக்கிய நோக்கமே நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் வகுத்துள்ள சிறப்பு ஏற்பாடு தான் இந்த சதகதுல் பித்ரா நோன்புப் பெருநாள் தர்மமாகும். இஸ்லாத்தில் ஏழைகளுக்கு உதவுவதையும், அவர்களின் கண்ணீர் துடைப்பதையும் முக்கிய கடமையாக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் “பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்” என்றும், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்பவர் இறை நம்பிக்கையாளர் அல்லர்” என்று உரக்க கூறினார். ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்யும் தூய எண்ணத்தோடு மனித நேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகரம் சார்பாக பித்ரா வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் S.அனீஸ் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் I.S. முனவ்வர் ஷரீப், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.நகர நிர்வாகிகள் சலீம்,பிலால்,ஷாபீர் ,முபாரக், அல்தாப்,முன்னா, வகிக்த்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் வீடுதேடி ஃபித்ரா வினியோகம்..!
புதுகை.ஜூன்.14., இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் அக்னிபஜார் பகுதியில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் துவங்கிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மற்றும் நகர பொருளாளர் அப்துல் கரீம் முன்னிலை வாகித்தனர். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான் அனைவரையும் வாரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் அலி மார்க்க விளக்க உரையாற்றினார். இறுதியில் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார். 200 ஏழைகளுக்குரிய பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வாகனத்தில் வைத்து வீடுதேடி வினியோகம் செய்யப்பட்டது. சமையல் பொருட்கள் ரொக்கம் உள்பட 35.000 மதிப்புள்ள பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) #IKP_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
IKP ரியாத் மண்டலம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
ரியாத்.ஜூன்.09., சவுதிஅரேபியா ரியாத் மண்டலம் #இஸ்லாமிய _கலாச்சார_பேரவை-யின் சார்பில் EXIT-8 வெல்கம் உணவகத்தில் நேற்று (08/06/2018) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் #இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி #IKP மண்டல பொருளாலர் திருச்சி ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் IKP முன்னால் தலைமை ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை செயலார் M.நிவாஜிதீன், KSATS - மண்டல செயலாளர் தஞ்சை அலி, முன்னால் மண்டல தலைவர் அடியற்க்கை அலி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_IT_WING #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை_ரியாத்_மண்டலம்