சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் - தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது . தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் . நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது . நேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். விடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது . தகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING) சிங்கப்பூர் மண்டலம்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை FIM சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டு!
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது . தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . இக்கூட்டத்தில் , கடந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஹாஜி . சர்புதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . அதன் பிறகு பென்கூலன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபிக் அவர்கள் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (FIM) சார்பில் பொற்கிழி வழங்கி கெளரவித்து பாராட்டி சிறப்பித்தார்கள் . இந்நிகழ்வில் MES நிறுவனத்தின் தலைவர் ஹாஜி. அப்துல் ஜலில் , சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் ஹாஜி. முகம்மது கெளஸ் , துணைத் தலைவர் ஹாஜி . ஜெய்னுலாபுதீன் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள்
துறைமுகம் பகுதி தொழில்நுட்ப அணி செயலாளர் திருமணத்தில் மஜக நிர்வாகிகள்!
சென்னை. மார்ச்.05., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT WING) செயலாளர் சகோ யாசர் அரபாத் அவர்களின் திருமண நிகழ்வு இன்று 05-03-2017 நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ராயபுரம் அபுதாஹிர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், துணை செயலாளர்க ள் ஹூசைன் மற்றும் அப்பாஸ், துறைமுகம் பகுதி துணை செயலாளர்கள் அலீப் மற்றும் அபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING மத்திய சென்னை 05.03.2017