விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் வடக்கு-தெற்கு, கடலூர் வடக்கு-தெற்கு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் #இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையில் நடைப்பெற்றது. மஜக #இணைப்பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் இளைஞரணி பணிகள், கட்சிக்கு இளைஞரணியின் தேவைகள் குறித்து பேசினார். இளைஞரணி மெல்ல மெல் வீரியமடைவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னதாக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் மஜக மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து விழுப்புரம் மண்டலம் சார்பாக பயிலரங்கம் நடத்துவது குறித்தும், மாவட்டம் முழுவதும் இளைஞரணி நிர்வாகத்தை அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் ஐந்து மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_தலைமையகம் 01.11.21
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
பண்ருட்டியில் மஜகவில் இணைந்த மாற்று கட்சி பிரமுகர்..!
பண்ருட்டி. நவ.01., கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட #AIMIM நகர தலைவர் சகோ.நூர் முஹம்மது #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் முன்னிலை தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார். இதில் மாவட்ட செயலாளர் மன்சூர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் கான், யாசின் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம் 31.10.21
சங்காரபுரத்தில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு! அரசு வேலை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! மஜக மாநில துணைசெயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை நிகழ்த்தினார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கோரமான வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், நிவாரண தொகையினை அதிகப்படுத்த கோரியும், விபத்துக்கு காரணமான அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை கோரியும் அனைத்து கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் ஜாவித் , திருக் கோவிலூர் நகர செயலாளர் சாதிக் பாஷா, சங்கராபுரம் ஷேக் அப்துல்லா, கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சலீம் , மங்கலம் பேட்டை நகர செயலாளர் ரியா பரீத், மற்றும் திருக்கோவிலூர் மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 01.11.2021
நீடூரில் மஜக நகர அலுவலகம் திறப்பு விழா!
மனிதநேய ஜனநாயக கட்சி மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் நகர அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் என்.எம்.மாலிக், அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் குவைத் மண்டல செயலாளர் நீடூர்.முஹம்மது நபிஸ், பந்தநல்லூர் உஸ்மான் அலி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ்.நூருல் அமீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நீடூர் லியாகத் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் முஹம்மது குர்ஷித் கான், மற்றும் ஜமாத், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம் 31.10.2021
கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் நகர ஆலோசனை கூட்டம்..
கடலூர். அக்.31., கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் நகர ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் கடலூர் மன்சூர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர் கான், மாவட்ட துணைச்செயலாளர் பண்ருட்டி யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் எதிரவரும் நவம்பர் 13 அன்று நடைபெறும் மண்டல செயற்குழுவில் சிறப்பாக நடத்துவது போன்ற இக்கூட்டத்தில் பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம் 31.10.21