இவ்வாண்டு வடகிழக்கு #பருவமழை தொடக்கத்திலேயே தீவிரம் காட்டியுள்ளதால் தமிழகம் எங்கும் மழை வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது போன்ற தருணங்களில் அரசின் பணிகளுக்கு துணை நின்று, அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து தரப்பும் களமிறங்குவது மனிதநேய கடமையாகும். அந்த வகையில் வழக்கம் போல மனிதநேய ஜனநாயக கட்சியினர் களமிறங்கியுள்ளனர். மாவட்ட வாரியாக 'பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக் குழு ' அமைக்கப்பட்டு, தொண்டர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவது, அரசின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் இக்குழு முழு வீச்சில் ஈடுபட உள்ளது. எனவே மனிதநேய ஜனநாயக கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் இதில் முழு வீச்சில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08.11.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
தென்காசியில் மஜகவின் கொடியேற்று விழா!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி நகரம் சார்பாக உற கொடியேற்று விழா நிகழ்ச்சி நகர செயலாளர் சிலம்பாட்டம் சாகுல், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அச்சன் புதூர் பீர் மைதீன், மாவட்ட பொருளாளர் ஆதம் ஹனிபா, ஆகியோர் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், இளைஞரணி மாவட்ட பொருளாளர் அச்சன் புதூர் அன்வர் சாதிக் அலி, ஒன்றிய செயலாளர் மன்சூர், தென்காசி நகர துணை செயலாளர் முஸ்தபா, மற்றும் நகர, நிர்வாகிகள் கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 07-11-2021
குழந்தை பாரதிக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்! தஞ்சையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
தஞ்சாவூரை சேர்ந்த அந்த 23 மாத குழந்தை பாரதியின் உயிர் காக்க நிதி சேகரிக்கும் பணிகள் உச்சக்கட்டமாக நடந்து வருகிறது. முதுகு தண்டு வட தசை நார் சிதைவு SMA TYPE - 2 எனும் அரிய வகை மரபணு குறைபாடு நோயால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவில் 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஊசி உள்ளது. இதற்காக பொதுமக்கள் உதவியோடு 14 கோடி வசூல் ஆகி உள்ளது. மீதி 2 கோடிக்காக அக் குடும்பம் கண்ணீரோடு நிற்கிறது. இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு தொழுகையில் அக்குழந்தைக்காக பொது வசூல் செய்யப்பட்டது. தஞ்சைமாவட்டத்தில் பரவலாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் இதற்காக களப்பணியாற்றி வருகின்றனர். தஞ்சாவூர் ஆற்றாங்கரை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற நன்கொடை சேகரிப்பில் மஜக வினருடன், கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது. இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக செல்வந்தர்கள், வணிகர்கள், அலுவலக ஊழியர்கள், உழைப்பாளிகள் ., சாமானியர்கள், ஏழைகள் என பலரும் உதவியதால் 14 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. மீதி 2 கோடி ரூபாய் அதிக
ஹஜ் பயணிகளுக்கு இடையூறு செய்யாதீர்… ஒன்றிய அரசுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
உலகில் அதிகமாக #புனித_ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்தியாவின் 20 முக்கிய விமான நிலையங்களிலிருந்து இந்த சேவைகள் புனிதப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. இதனால் அரசுக்கு வணிக ரீதியான லாபங்களும் கிடைத்து வந்தது. கடந்த ஈராண்டாக கொரணா தொற்று காரணமாக ஹஜ் பயண சேவைகள் நடைபெறாத நிலையில், இவ்வாண்டுக்காண ஹஜ் விண்ணப்ப சேவைகள் தொடங்கியிருக்கிறது. அதில் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 10 விமான நிலையங்களின் வழியே ஹஜ் பயண சேவைகள் இல்லை என்பது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்லும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிப்படைவர். அவர்கள் ஹைதராபாத், கொச்சி, பெங்களுறு விமான நிலையங்கள் வழியே கூடுதல் நேரம், கூடுதல் பொருளாதாரம் செலவழித்து செல்ல வேண்டிய தேவையற்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதிகமான ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக புனித பயணிகளுக்கு இது பெரும் சிரமத்தை தரும். அரசியல் மற்றும் சமுதாய விவகாரங்களில் காட்டி வந்த மத பாராபட்சங்களை ஆன்மீக விவகாரத்திலும் காட்டுவது ஒன்றிய அரசின் உச்சகட்ட காழ்ப்புணர்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது. எனவே ஹஜ் புனிதப் பயணிகளின் பயண சேவைக்கு இடையூறு
நம் பாரம்பரிய பண்புகளை கட்டிக்காக்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!
எம்மோடு சுற்றமும், நட்புமாக வாழும் இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் கொண்டாடி மகிழும் மற்றொரு தீபாவளி திருநாள் இது. இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகவும் இத்திருநாள் திகழ்கிறது. இந்நாளில் சகிப்புத்தன்மை, நேசம், அரவணைப்பு போன்ற நம் பாரம்பரிய பண்புகளை கட்டிக் காக்க உறுதியேற்போம் என்று கூறி, இப்பண்டிகையை கொண்டாடும் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 03.11.2021