மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் நகரம் சார்பில் இன்று பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெய்வாசல் காலனி பகுதியில் சுமார் 65 குடும்பதினருக்கு நிவாரணப் பொருட்கள் நகர மஜக சார்பில் நிர்வாகிகள் வழங்கினர். இதில் குவைத் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபிஸ், மாவட்ட துணை செயலாளர் நீடூர் மிஸ்பாஹூதீன், ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நீடூர் லியாகத் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் குர்ஷித் கான், கிளை செயலாளர் அசாருதீன், நிஜார், அப்துல் மாலிக், அக்பர் அலி, பஹத், முஹம்மது சாக்கிர், பாபு, பஜில் ரஹ்மான், ஜூபீர், ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மயிலாடுதுறை_மாவட்டம் 21.11.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
வரலாற்றை உயிர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்!
#மூன்று_வேளாண்_சட்டங்கள்_திரும்ப_பெறப்பட்டது_குறித்து! #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை! இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஓராண்டாக தொடர்ந்து விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியம் செய்தார். அவரது அமைச்சர்களும், பாஜக வினரும் விவசாயிகளின் போராட்டங்களை சிறுமைப்படுத்தியதோடு மட்டுமின்றி, பல இடங்களில் எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் அயராமல்; அஞ்சாமல் களமாடி இந்திய அரசியலின் போக்குகளை திசை மாற்றும் அளவுக்கு போராட்டங்களை கூர்மைப்படுத்தினர். இதற்கு பஞ்சாப் மாநில விவசாயிகள் தலைமையேற்றதுதான் முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர். அவர்களின் தியாகம் நாடு தழுவிய அளவில் பொதுமக்களை விவசாயிகளுக்கு ஆதரவாக மாற்றியது. அதன் விளைவாக இன்று பிரதமர் மோடி அவர்கள் , மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளின் தியாகப்பூர்வ போராட்டங்களுக்கு கிடைத்த இமாலய வெற்றியாகும். அடம் பிடித்த பிரதமரையும்,ஒன்றிய அரசையும் பணிய வைத்த விவசாயிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக தமிழகத்தில் விவசாயிகளோடு இணைந்தும், தனித்தும்
கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் திருப்பூண்டி மஜகவினர்.!
நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூண்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் V.P நாகை மாலி அவர்கள் பார்வையிட்டார், இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் மற்றும் கிளை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 18.11.2021
கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மஜகவினர்!
நவ:14., கன்னியாகுமரியில் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு பொருட்கள் சுசிந்திரம் கற்காடு பகுதிகளில் வழங்கப்பட்டது. கனமழையால் சுசீந்திரம் கற்காடு காலனி பகுதியில் திடீரென வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரகுமான், அமீர் கான் ஆகியோர் நள்ளிரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்த்து பார்வையிட்டு முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர் மேலும் இரவு உணவும் தயார் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையானவற்றை செய்து தர கோரிக்கை வைத்தனர். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணியாளர்களை சந்தித்து மீட்ப்பு பணி குறித்து கேட்டறிந்தனர். இப்பணியில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அசரப் அலி,
வேதை நகராட்சி முற்றுகை அறிவிப்பு… மஜக கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!
வேதை.நவ.14., நாகை மாவட்டம், தோப்புத்துறையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், கழிவு நீர் அடைப்பாலும் குட்டையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்று நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வேதாரண்யம் நகராட்சி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் வருகை தந்து மஜகவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அதன் பிறகு இரவுக்குள் துரித நடவடிக்கை எடுக்கப்படடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாக மஜகவினர் அறிவித்தனர். மஜகவினரின் முன் முயற்சிகளுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தகவல், #MJK_IT_WING #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மஜக_நாகை_மாவட்டம் 14.11.21