சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது . தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . இக்கூட்டத்தில் , கடந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஹாஜி . சர்புதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . அதன் பிறகு பென்கூலன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபிக் அவர்கள் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (FIM) சார்பில் பொற்கிழி வழங்கி கெளரவித்து பாராட்டி சிறப்பித்தார்கள் . இந்நிகழ்வில் MES நிறுவனத்தின் தலைவர் ஹாஜி. அப்துல் ஜலில் , சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் ஹாஜி. முகம்மது கெளஸ் , துணைத் தலைவர் ஹாஜி . ஜெய்னுலாபுதீன் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள்
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
தேனி (மேற்கு) மாவட்டம் சார்பில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா…
தேனி. பிப்.28., தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய வளாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். காவல் நிலைய அதிகாரிகளும், காவலர்களும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம். 28.02.2017
மஜக தேனி (மேற்கு) மாவட்டம் 2ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு…
தேனி. பிப்.28., தேனி மாவட்டம் கம்பம் நகர அலுவலகம் முன் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம் 28.02.2017
சிங்கப்பூரில் நூல் அறிமுகம் தமிமுன் அன்சாரி.MLA சிறப்புரை!
சிங்கப்பூர்.பிப்.25., புதிய நிலா இதழின் 21ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'சிறகிருந்தால் போதும்' நூல் வெளியீடு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 05-03-2017 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழூற்று மு.தமிமுன் அன்சாரி.MLA (பொதுச்செயலாளர்.மஜக) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களும் உரை நிகழ்த்துகிறார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) சிங்கப்பூர். 25.02.2017