பிப்.03., ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்த அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சிம்பு கருத்து கூறியது அனைவராலும் பாராட்டப்படுகிறது . இது குறித்து அலைபேசியில் சிம்புவிடம் பேசிய பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் , ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலுசேர்த்ததற்கும் , இதை மதரீதியாக கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து கருத்து கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் . இதற்கு சிம்பு அவர்கள் , தான் உண்மைக்கு ஆதரவாக பேசியதாகவும் , இதனால் ஒரு மதவெறி அமைப்பு தனக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் , தான் இறைவனுக்கு மட்டுமே பயப்படுவேன் என்றும் , தான் அனைத்து மதங்களையும் மதிக்கும் தமிழன் என்றும் கூறினார் . தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 03.02.17
செய்திகள்
மஜகவின் தொடர் முயர்ச்சியால் மூன்றாவது நாளாக துப்புரவு பணி…
பிப்.03., குடியாத்தம் நகரம் 8- வார்டு MBS நகரில் சில வருடங்களாக குப்பை அள்ளாத அவலநிலை உள்ளது. சுகாதார சீர்கேடு குறித்து மனித ஜனநாயக கட்சியின் சார்பாக மனு அழிக்கப்பட்டது.. மஜகவின் தொடர் முயற்சியால் இன்று மூன்றாவது நாளாக துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிகளில் சுற்றி குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும், அதிகாரிகளுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் எங்கள் நன்றினை தெரிவித்து கொள்கிறோம்.. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING), குடியாத்தம் நகரம். 03.02.17
E.அஹ்மத் உடல் அடக்கம்! பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பிப்.02., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் E.அஹ்மத்வின் உடல் நேற்று டெல்லியிலிருந்து கோழிக்கோடு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் வருகை தந்து மரியாதை செய்தனர். இன்று காலை கண்ணூர் ஜாமியா மஸ்ஜிதில் அவரது உடல் நண்பகல் 12 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அவருக்கான இறுதி தொழுகையில் தமிழகத்திலிருந்து பேரா.காதர் மெய்தீன், அபூபக்கர் MLA, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட IUML தலைவர்களும், தொண்டர்களும் கலந்துக் கொண்டனர். மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இறுதித் தொழுகையில் பங்கேற்று, IUML தலைவர்களுடன் ஆறுதலை பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் வழியாக இரயிலில் புறப்பட வேண்டியிருப்பதால் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை லீக் தலைவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing) 02-02-2017
மஜக பொதுச்செயலாளருக்கு நேரில் பாராட்டு!
பிப்.02., சட்டசபையில் ஜல்லிகட்டு போராட்டத்தை ஆதரித்து பேசியதர்காகவும், ஒஸாமா பேனர் குறித்த அவதூறுக்கு சட்டசபையிலே மறுப்பும், விளக்கமும் கொடுத்ததர்க்கும் பாராட்டு தெரிவித்து தமிழக பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர் மற்றும் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர்கள் சட்டசபைக்கு வந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். சத்தியத்திர்காக சமரசம் இல்லாமல் போரடியது மகிழ்ச்சி அளிப்தாகவும், இதனால் பலதரப்பு மக்களும் பாராட்டுவதாகவும் கூறினர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING). 02.02.17
சட்டசபை வளாகத்தில் கோக், பெப்சிக்கு எதிராக விழிப்புணர்வு பதாகை! M.தமிமுன் அன்சாரி MLA முன்முயற்சி!
பிப்.02., நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு "2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்" என்ற பதாகையோடு வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம் நடத்தியப்போது பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள். அதன் விளைவாக மார்ச் 1 முதல் வணிகர் சங்கங்கள் இனி பெப்சி, கோக் விற்கக்கூடாது என வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஆதரிக்கும் விதமாக, இன்று எனது நிலைபாட்டை தெரிவித்தேன் என்று கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)