(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அறிவியல் தமிழை வளர்த்தெடுத்து 8 லட்சம் புதிய தமிழ் சொற்களை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கிய பேரறிஞர். மணவை முஸ்தபா தனது 82 வயதில் மரணமடைந்திருக்கிறார். (இன்னா லில்லாஹி ...) தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர். தமிழை இவர் காதலித்தாரா? தமிழ் இவரை காதலித்ததா? என்ற கேள்விகளுக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. தமிழ் செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்கு அரும்பாடுபட்டவர். இதற்காக தமிழக அரசுக்கு பல அரிய ஆலோசனைகளை திரட்டிக் கொடுத்தார். யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பில் 35 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியதோடு, ஆனந்த விகடனின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்புக்கு தலைமை பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அவர் எழுதிய "மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்" நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசும், "இஸ்லாமும், சமய நல்லிணக்கமும்" நூலுக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசும், "அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி" க்கு அனந்தாச்சாரி பௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதல் பரிசும் கிடைத்தது. ஆங்கிலம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்களை அவர் மொழிப் பெயர்த்துள்ளார். அதில் உலகின் தலைச்சிறந்த நூறு
செய்திகள்
விழுப்புரத்தில் மஜக இரத்ததான முகாம்!
பிப்.06., விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகர் மனிதநேய ஜனநாயக கட்சியும், ஸ்ரீ அரவிந்த் டயாபடீஸ் மருத்துவமனையும் இனைந்து மாபெரும் இரத்ததான முகாம் 06-02-2017 இன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி முகாமை துவங்கிவைத்தார். மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம், துணை செயலாளர் S.முகம்மது அலி, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் மற்றும் விழுப்புரம் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) விழுப்புரம் மாவட்டம் 06-02-2017
இளையான்குடி தேவூரணியை தூர்வாரக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த மஜக!
பிப்.06., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் அமைந்துள்ள தேவூரனியை தூர்வாருவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை 05.02.2017 அன்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை கேட்டகொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஏற்கனவே மஜகவினர் ஊரனியை சுத்தம் செய்ததற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். எதிர்வரும் புதன் கிழமை அன்று ஊரனியை நேரடியாக வந்து பார்ப்பதாகவும். மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்குட்பட்ட தொகைக்குள் (10 லட்சத்திற்குள் எஸ்டிமேட்) வந்தால் உடனே அனுமதியளிப்பதாக உறுதியளித்தார். மேலும் நகரில் அதிகரித்து வரும் வெறிநாய்கள் பற்றியும் ஆட்சியரிடம் எடுத்து கூறப்பட்டது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சந்திப்பில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுதலைவர் சைஃபுல்லாஹ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச்செயலாளர்கள் செய்யது மஹபு சிராஜுதீன் மற்றும் ஜமால் முஹம்மது ஆகியோர் கலந்து கொன்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி (#MJK_IT_WING) சிவகங்கை மாவட்டம் 06-02-2017
எண்ணூர் எண்ணெய் கழிவுகளை பார்வையிட்ட மஜக பொதுச் செயலாளர்…
பிப்.06., சென்னை எண்ணூரில் கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் களிவுகளின் பாதிப்பை மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வளர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் மாநில செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர், மாவட்ட பொருளாளர் ஜாபர் உள்பட மௌலா, கரிமுல்லாஹ், தாரிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 05.02.17
சைதாப்பேட்டை பகுதியில் மஜக கொடி ஏற்றம்…
பிப்.06., வேலூர் கிழக்கு மாவட்டம் 3வது மண்டலம் 31வது வட்ட சைதாப்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 05-02-2017 மாலை நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றிவைத்து சிற்றுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர் கிழக்கு மாவட்டம் 05-02-2017