திருவள்ளூர்.மார்ச்.09., திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் 'அஹ்மத் ஷா படேமகான்' பள்ளிவாசலுக்கு சொந்தமான தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வே எண் 229/3-ல் அமையப்பெற்ற 100 கோடி மதிப்புடைய 2.44 ஏக்கர் நிலம், 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மஜக தலையிட ஜமாத் நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர். இதனடிப்படையில் இன்று (9.3.2017) மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தனர். இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் ஜமாத் நிர்வாகிகளோடு தலைமைச் செயலகம் சென்று வக்ஃப் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல் அவர்களை சந்தித்து முறையிட்டார். உடனடியாக அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். சம்மந்தப்பட்ட அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி எதுவும் நடைபெற்றால் உடனடியாக தடுத்து நிறுத்தவும் கூறினார். மேற்கொண்டு தொடர்ந்து இந்த விசயத்தில் கவணம் செலுத்தி வக்ஃப் சொத்தை மீட்க நவடிக்கை மேற்கொள்வதாகவும் மஜக பொருளாளரிடம் வாக்குறுதியளித்தார். இச்சந்திப்பின்போது மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், வேலூர் மே.மாவட்ட செயலாளர்
செய்திகள்
மஜக தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் “தாமிரபரணியைகாக்க” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தூத்துக்குடி.மார்ச்.09.,மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் தென்மாவட்ட மக்களின் நீராதாரமாம் தாமிரபரணியை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எதிர் வரும் 12-03-2017 அன்று மாலை 4மணியளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கீழ் வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். 1) பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் நீர் எடுக்க நிரந்தர தடை செய்ய வேண்டும். 2) தாமிரபரணி யில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பணை கட்டவேண்டும். 3) DCW, ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு நீர் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். தலைமை: A.ஜாஹிர் உசேன் (மஜக மாவட்டச் செயலாளர்) கண்டன உரை : S.S.ஹாருன் ரசீது M.com., (மஜக மாநில பொருளாலர்) மற்றும் தோழமை கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் போன்ற முக்கிய பிரதிநிதிகள் உரையாற்றுகிறார்கள் அணைத்து சமுதாய மக்களே, இளைஞர்களே, மாணவர்களே, விவசாயிகளே தாமிரபரணியில் நமது உரிமையை நிலைநாட்ட அணிதிரள்வோம் வாரீர்... வாரீர்.... அழைக்கிறது மஜக தூத்துக்குடி மாவட்டம். தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 09.03.2017
மஜகவின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் நகரில் தெருவிளக்கு சீரமைக்கும் பணி…
வேலூர்.மார்ச்.09., குடியாத்தம் நகரத்திற்கு உட்பட்ட 8ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் சில நாட்களுக்கு முன்பு தெருவிளக்குகளை சரி செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே சரிசெய்து கொடுக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று குடியாத்தம் 8ஆவது வார்டு பகுதிகளில் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING வேலூர் மாவட்டம். 09.03.2017
திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…
திருவள்ளூர்.மார்ச்.08., திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் 07.03.17 அன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இன்ஷா அல்லாஹ் மார்ச் 31ம் தேதி ஆவடியில் எழுச்சி பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், அதே போல் ஏப்ரல்.21 அன்று அம்பத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது திருவள்ளுர் பகுதியில் வக்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனத்திடமிருந்து வக்பு இடத்தை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப் பட்டது இக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பகுர்தீன், ஆவடி நகர நிர்வாகிகள் மற்றும் பூவை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழிநுட்ப அணி. #MJK_IT_WING திருவள்ளூர் (மே) மாவட்டம். 07.03.2017
மஜக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை (கி) சார்பில் மரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு…
நெல்லை.மார்ச்.08., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வை கொண்டாடும் வகையில் தலைமை அறிவுறுத்தளின் பேரில் நகரத்தின் முக்கிய இடங்களில் மரமாகவும், மரகன்றுகளாகவும் மற்றும் மூலிகை செடிகள் நாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) நெல்லை கிழக்கு மாவட்டம். 08.02.2017