(#மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) இந்தியாவின் முதல் பிரதமர்,சுதந்திர போராட்ட தலைவர், சமதர்ம சிந்தனையாளர்,சிறந்த பேச்சாளர்,கூர்மையான எழுத்தாளர்,மதர்ச்சான்பின்மையின் அடையாளம் என பண்டிதர்.ஜவஹர்லால் நேருவை வரலாறு போற்றுகிறது. காந்தியாரின் நம்பிக்கைக்குரிய தலைவராக திகழ்ந்ததாலேயே ,அவரை நாடு சுதந்திரமடைந்த இக்கட்டான காலக்கட்டத்தில் முதல் பிரதமராக்கினார். அணி சேரா கொள்கைகளின் மூலமாக உலக அளவில் பிரபலமான நேரு ஜி அவர்கள் , ஐந்து ஆண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். அமைதியும், சமூக நீதியும்,வளமும் கொண்ட இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்டார். நேருவின் கனவுகளைத்தான்,பின்னாளில் திரு V.P சிங் அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து நிறைவேற்ற பாடுபட்டார். அவர் எழுதிய DISCOVERY OF INDIA,மற்றும் மகள் இந்திராவுக்கு கடிதங்கள் ஆகிய நூல்களை வாசித்தப்போது அவரது உலக அறிவும்,அரசியல் பார்வையும் என்னை வியக்க வைத்தது. காந்தியாரும்,அபுல் கலாம் ஆசாத்தும் ஏன் அவரை கொண்டாடினர் என்பதை புரிய முடிந்தது. நேருவின் கரங்களில் சமூக நீதியும்,மதச்சார்பின்மையும் பாதுகாப்பாக இருந்தது. இன்று அவரின் 128 வது பிறந்த நாளை நாடு குழுந்தைகள் தினமாக கொண்டாடுகிறது. நேரு இப்போதும் நமக்கு தேவைப்படுகிறார்! குழந்தைகளின் வழியே நேருவின் கொள்கைகளை வளர்த்து எடுப்போம். இது நேரு வழிநடத்திய நாடு என்பதை சொல்லிகொடுப்போம்!
செய்திகள்
மங்கலப்பேடையில் மஜகவின் மாபெரும் எழுர்ச்சி..
கடலூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலப்பேட்டை கிளை சார்பாக புதிய அலுவலகம் மற்றும் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் N.N.இப்ராஹிம் திறந்து வைத்தார், கொடிகளை தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பைஸில் முன்னில்லை வகித்தனர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அஜீஸ் கான் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர் மற்றும் இளைஞர் அணி பொருலாளர் ஹியாத் மற்றும் நகர, ஒன்றிய மஜக மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் பஃகத் மற்றும் நபில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 12.11.17
வழக்கரிஞர் செம்மணி அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் ஆறுதல்…
நெல்லை.நவ.14., கூடங்குளம் போராட்டக்குழு வழக்கரிஞர் செம்மணி அவர்கள் சில தினங்களுக்கு முன்பு காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு கால் முறிவு மற்றும் பளத்த காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மனிதநேய ஜனநாக கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாஹித் அவர்கள் தலைமையில் மாநில துணைச்செயளாலர் சகோதரர் புலியங்குடி செய்யது அலி ஆகியோர் செம்மணி அவர்களை சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் கூறினார். அவருடன் நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், பொருளாலர் S.சேக் இப்ராஹிம், மேற்கு மாவட்ட செயளாலர் I.மீரான் இஸ்மத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், புலியங்குடி, தென்காசி நிர்வாகிகளும் உடன் சென்று ஆறுதல் கூறினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம்.
மஜக திருப்பூர் மாநகர் மாவட்டம் செரங்காடு மற்றும் காலேஜ் ரோடு கிளை நிர்வாகம் தேர்வு..
திருப்பூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் செரங்காடு மற்றும் காலேஜ் ரோடு கிளை கடந்த சில தினங்கள் முன்பு உதயமானது அதன் நிர்வாகிகள் விபரம் கீழ் வருமாறு. கிளை செயலாளர் : J. நஸ்ருதீன் 9994026552 கிளை பொருளாளர் : A. மன்சூர்அலிகான் 9566810838 துணை செயலாளர் : J அப்துல் ஹாக்கிம் 9843034886 இளைஞர்அணி செயலாளர்: B. காதர்கான் 7708503155 மருத்துவ அணி செயலாளர் M. முகமது ஆசிக் 9842456199 காலேஜ் ரோடு கிளை நிர்வாகிகள் கிளை செயலாளர் : சாகுல் 9087145106 கிளை பொருளாளர்: ரியாஸ் அஹமது 9787553823 ஆகிய நிர்வாகிகள் 12-11-2017-அன்று நடந்த திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பரிந்துரைக்கபட்டு தலைமையால் நியமனம் செய்யபட்டுள்ளர்கள் என அறிவிக்கபடுகிறது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாநகர்_மாவட்டம் 14.11.17
ஓய்வின்றி மக்கள் சந்திப்புகள்! காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை….. நாகை MLA வின் தொடர் சந்திப்புகள்!
(தொகுப்பு_2) கடந்த 1 மாதமாக டெங்கு பாதிப்புகள், மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தொகுதியில் தீவிர சுற்றுப் பயணங்கள் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அவருடன் துறை சார்ந்த அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், மஜக மற்றும் அதிமுக கட்சியினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (13.11. 17) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொகுதியில் உள்ள திருமருகல் ஒன்றியம், நாகை ஒன்றியம் ஆகியவற்றிலுள்ள கிராமங்களுக்கும் நாகை- நாகூர் நகராட்சி பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இதர குறைகளை கேட்டு அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்சி சார்பற்று திமுக, கம்யூனிஸ்ட், த.மா.க, காங்கிரஸ், வி.சி.க, நாம் தமிழர், உள்ளிட்ட பிற கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்து அவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் MLA அவர்களை சந்தித்து தொகுதி நலன் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். நேற்று தொடர்ந்து ஓய்வின்றி காலை முதல் இரவு லரை 11 மணி நேரம் மக்களை சந்தித்து மழை நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது