(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்து செய்தி) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தை பேணிகாக்கும் வகையில் இன்று அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. நேரு காலம் தொடங்கி நாடு போற்றும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அவர் தலைமையேற்றிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு அம்சமாகும். மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூக நீதியை காத்திடவும், நாடு இன்று சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளிலிருந்து நாட்டை மீட்கவும், வலிமை வாய்ந்த தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை வழிநடத்துவதோடு மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம். அவரை ஏகமனதாக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 12.12.17
செய்திகள்
குடியாத்தம் நகரம் 24 வார்டு புதிய கிளை உதயமானது..! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!
வேலூர்.டிச.11.,மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கோபாலபுரத்தில் A.முபாரக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் நகர கோபாலபுரம் 24 வது வார்டு மஜக புதிய கிளை உதயமானது. இதில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், நகர து செயலாளர் சலீம்,ஒன்றிய கிளை நிர்வாகி நதீம்,மற்றும் முபாரக், சித்திக், சாதிக், பிலால், அல்து, நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம் #வேலூர்_மேற்கு_மாவட்டம் 11.12.2017.
பற்றி எரிகிறது குமரி மாவட்ட கடலோர கிராமங்கள்! தமிமுன் அன்சாரி MLA மற்றும் தனியரசு MLA நேரில் ஆறுதல்!
குமரி. டிச.11., ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்து கடலோர மக்களையும், மீனவ மக்களையும் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இரவியன் புத்ததுறை பகுதியில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கான மீனவ மக்களுக்கு மத்தியில் இருவரும் ஆறுதல் உரையாற்றினர். அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் இம்மாவட்டதிற்க்கு வருகை தந்து மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், இதை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உதவிகள் செய்ய வேண்டும் என்றும், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு மற்றொரு கடலோர கிரமமான வள்ளவிளைக்கு வருகை தந்து அங்கு கதறிய மக்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்த கடற்கரையில் இருந்துதான் நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் விபரங்களையும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கேட்டறிந்தார். அடுத்து மார்த்தாண்டம் துறை கிராமத்துக்கு
மஜக மாநில செயலாளருக்கு “மக்கள் காவலர் விருது” வழக்கப்பட்டது..!
சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் மஜகவில் இணைத்துக் கொண்டார். அனைத்து இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினத்தில் தலைநகர் டெல்லியில் தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய மாண்புமிகு நீதியரசர் M.கற்பக விநாயாகம் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு நீதியரசர் K.இராமமூர்த்தி அவர்களால் மக்கள் காவலர் விருது மஜக மாநில செயலாளர் தென்சென்னை J.சீனி முஹம்மது அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்ட பொருளாளர் A. காதர் ஷரீப் அவர்கள் உடனிருந்தார். சென்னை விமான நிலையம் வந்த அடைந்த சீனி முஹம்மது அவர்களை வரவேற்க தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜியா, துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட இளைஞரனி செயலாளர்
ஆற்காடு நவாப் முஹம்மத் அலி அவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு..!
சென்னை. டிச.11., நேற்று ஆற்காடு நவாப் முஹம்மத் அலி அவர்களுடன் மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கூடம் சம்மந்தமாக சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் அப்போலோ ஹனிபா,முன்னால் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் Ex.MP, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் NA.தைமியா, சீனி முஹம்மது,SDPI தெஹ்லான் பாகவி, PFI அன்சாரி ஆகியோர் கலந்துரையாடினர். இதில் மதரஸா-இ-ஆஸம் சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கல்விக்கூடங்கள் கட்டுவதற்க்காக செலவு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். அப்போலோ ஹனிபா அவர்கள் ஆற்காடு நவாப் முகம்மது அலி அவர்களிடம் கூறும் போது மஜகவின் முயற்ச்சியால் தான் முதன்முதலில் அந்த போராட்டம் நடைபெற்றது என்றும் அதனை தொடர்ந்து மற்றவர்கள் வந்தார்கள் என்ற தகவலை தெரிவித்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை