சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.. இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் M.M.பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.2017
செய்திகள்
குடியாத்தம் நகரத்தில் டாம்கோ கடன் திட்ட துவக்க விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
வேலூர்.டிச.13., வேலூர் மாவட்டம் சிறுபான்மையினருக்கான கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ)கடன் திட்டங்களுக்கான கடன் விண்ணப்பங்கள் வழங்கும் விழா குடியாத்தம் வட்டத்தில் இன்று (13.12.2017) குடியாத்தம் MBS நகர் திருமண மண்டபம் அஞ்சுமன் தெரு நடுப்பேட்டையில் மாலை 03-மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நல அலுவலர் திரு.S.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர், குடியாத்தம் வட்டாசியர் மற்றும் சிறுபான்மை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நாவஸ், மஜக நகர செயலாளர் S.அனீஸ், அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் இன்சாப் மாநில துணை செயலாளர் அலியார் அதாவுல்லா, லயன்ஸ் கிளப் தலைவர் S.கரிமுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ரஹமத்துல்லா,TMJK இஸ்மாயில், A.தாஜுதீன், ஜிலான், பீடி சங்க தலைவர் வாஹித், மற்றும் காதர் பாஷா, V.R.ரபீக், ADMK சலீம், காய்கறி வியாபாரி சங்க தலைவர் ஜாவித் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான 500 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களும் ,
ஜெருசலேம் பாலஸ்தீனியர்களுகே உரிமை!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரின் புனிதப் பகுதியாக கருதப்படும் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும் என்ற வரலாற்று போராட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மோசமான முடிவால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது. இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவ் இனி மாநகராக மட்டுமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகராக இனி ஜெருசலேம் தான் இருக்கும் என ட்ரம்ப் முட்டாள் தனமாக செய்திருக்கும் அறிவிப்பு உலகை பற்றியெறிய செய்திருக்கிறது. அமெரிக்க தேர்தலின் போது யூதர்களின் வாக்குகளை பெற அவர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். இதனால் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் யூத சியோனிஸ கொள்கை அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள். வாடிகன் போப் பிரான்ஸிஸ் ஜான்பால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சனையை இதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கின்றார். ஜெருசலேம் விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும் போது இதனால் மத்திய கிழக்கின் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்றிருக்கிறார். அதுபோல ரஷ்யா, வடகொரியா, சவுதி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா,
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் மனு!
குமரி.டிச.13., கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களுக்காக, அம் மாவட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் இரவிபுத்தூர் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை ஆகிய பகுதிகளில் போராடும் மக்களை சந்தித்து பேசினார். நாகை நம்பியார் நகர், ஆரிய நாட்டுத் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு புறப்பட்ட வள்ள விளை பகுதிக்கு சென்று அவர்கள் குறித்த விபரங்களை விசாரித்தார். பிறகு மாலை 5 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். உடனே கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட அனைவரையும் தேடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு, கலெக்டரின் வேண்டுகோள்படி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் குறித்த பெயர் மற்றும் விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்தார். அப்போது உ.தனியரசு MLA உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிறகு வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களை தேடும் பணியில் தேசிய
ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு முன்னால் கிளை தலைவர் மஜகவில் இணைந்தார்…
வேலூர்.டிச.12,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு கிளை தலைவர் அக்மல் தலமையில் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் T.R முன்னா (எ) நஸிர் , நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி து.செயலாளர் இம்ரான், காதர்பேட் கிளை செயலாளர் இஷராக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 12.12.2017