ஜூன்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் காணொளி வழியாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் தலைமை நிர்வாகிகள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் கடந்த 6 மாத கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாரபட்ட கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு... 1. இஸ்ரேலுக்கு கண்டனம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரில் அகதிகளாக அடைக்கலமாகியிருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாத யுத்தத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்தும் இந்த அராஜகத்திற்கு எதிராக இந்தியாவில் செயல்படும் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது 2. UAPA சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் மக்கள் விரோத சட்டம் என மனித உரிமை அமைப்புகளால்
செய்திகள்
பலஸ்தீன மக்களுக்காக CPM நடத்தும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு..
ஜூன்.01., கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். தற்போது பலஸ்தீனர்கள் அகதிகளாக அடைக்கலமாகியுள்ள ரஃபா நகரின் மீது ஐ.நா. மன்றம் மற்றும் சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இஸ்ரேல் ஈவு - இரக்கமற்ற தாக்குதலை தொடங்கியுள்ளது. இது உலகம் முழுக்க பேரதிர்வுகளையும், கடும் கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது . இந்நிலையில் இந்த அநீதியை கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை ஜூன் 2 அன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்பதுடன் முழுமையான ஆதரவையும் இப் போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறது . இப் போராட்ட களங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது . மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (CPM) முன்னெடுத்திருக்கும் ஜனநாயக கடமையை இதர தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் . உலகமே பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திரண்டு, தங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்
MJTS நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நாகை மாவட்ட பொருளாளராக, I.கண்ணுவாப்பா 5/84, மந்தைகார தெரு பொரவச்சேரி நாகை மாவட்டம் அலைபேசி; 97517 58808 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 30.05.2024.
நாகூரில் மஜகவில் தொடரும் இணைப்புகள் நாகை தொகுதியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
மே.27, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்த்து திரளான இளைஞர்கள் மஜக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாகை தொகுதிக்குட்பட்ட நாகூரில் திரளான இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அடையாள அட்டை வழங்கினார். மேலும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களது அரசியல் செயல்பாடுகள் மற்றும் மஜக-வின் கொள்கைகள் குறித்து புதியதாக இணைந்தவர்களுக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். சமீப காலமாக நாகையில் மஜக-வில் இணைபவர்களின் எண்ணிக்கைகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_it_WING #நாகை_மாவட்டம் 26.05.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, த/பெ; ஜார்ஜ் ராஜசேகரன் 142/A, அண்ணாசாலை, திருவண்ணாமலை- 606601 அலைபேசி; 9443629400 மாவட்ட அவைத் தலைவராக, A. முகமது அனிப் த/பெ; அப்துல்சுகூர் 54/139, மத்தலாங்குளத் தெரு, திருவண்ணாமலை - 606 601, அலைபேசி; 8124972434 மாவட்ட பொருளாளர், A. சாதிக் பாஷா த/பெ; அப்துல் காதர் 75 B, மாரியம்மன் கோவில் 11 தெரு, திருவண்ணாமலை - 606 601 அலைபேசி; 9786854604 மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) சா. தினகரன் B.E (Civil) த/பெ; D.சாது சுந்தர் ராஜ் 44, முருகையன் நகர், மணலூர்பேட்டை ரோடு, திருவண்ணாமலை - 606 603 அலைபேசி; 9443811318 2) S.K.சையத் அலி த/பெ; சையத் கரீம் 78/86 மாரியம்மன் கோயில் 4வது தெரு, திருவண்ணாமலை - 606 601 அலைபேசி; 9600230373 3) S. தஸ்தீகீர் சாதுல்லா த/பெ; சாதுல்லா 85/55 அண்ணா நகர் 9 வது தெரு, திருவண்ணாமலை - 606 601 அலைபேசி; 7708634204 4) I. ஷானவாஸ் இஸ்மாயில் த/பெ; இஸ்மாயில் 500 A மெயின் ரோடு, பக்கிரி பாளையம், செங்கம் தாலுக்கா, திருவண்ணாமலை - 606 709, அலைபேசி; 9790148197 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27.05.2024.