அன்புள்ளம் கொண்ட மனிதநேய சொந்தங்களே குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மாநாட்டு அழைப்பு குவைத் மன்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* எதிர் வரும் 23/டிச/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில்* நடைபெற உள்ளது. தாயகத்தில் இருந்து வருகை புரியும் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ. *M.தமிமுன் அன்சாரி* *MA MLA* அவர்களும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ. *K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். *பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்* அனைவரும் வருகைதந்து குவைத் மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது. *போர் குணம் படைத்த மாநாட்டின் மனிதநேய சொந்தங்களே* *புதிய பாதை புதிய பயணத்தில் சமூக நீதி ஓங்கட்டும்.* *குவைத்தை குலுங்கவைக்க அணிதிரள்வோம்.* அழைப்பின் மகிழ்வில் *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டம்.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை *செயற்குழு கூட்டம்* இன்று 25/11/2016 வெள்ளிக்கிழமை முர்காப் ராஜ்தானி உணவகம் அரங்கில் மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல ஊடக செயலாளர் *அதிரை.அப்துல் சமது* தொகுத்து வழங்க சகோ. *ஏனங்குடி சாதிக்* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல து. செயலாளர் சகோ. *நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான்* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. *இளையான்குடி சீனி முகம்மது* அவர்கள் *மஜகவின் செயல்பாடு மற்றும் நிகழ்கால நிகல்வுகள்* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல து. செயலாளர் சகோ. *ஏனங்குடி முகம்மது பாஸில்* அவர்கள் *மஜகவின் மேல் அரசியல் காழ்புணர்ச்சி* என்ற தலைப்பில் பேசினார் இதனை அடுத்து மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் *சமூக நீதி மாநாட்டின் செயல்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள்* பற்றி விளக்கினார், மண்டல பொருளாளர் சகோ. *நீடூர் முகம்மது நபிஸ்* அவர்கள் *மாநாட்டிற்கான பொருளாதாரம் குறித்து* பேசினார், மண்டல து. செயலாளர் சகோ. *அதிரை முகம்மது பைசல்* அவர்கள் *தொண்டரணியின் செயல்பாடு* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல ஆலோசகர்
குவைத் மண்டலம் மஜகவில் பல்வேறு கட்சியினர் இணைந்தனர்.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை - மனிதநேய ஜனநாயக கட்சியில் பல்வேறு கட்சியிலிருந்து வந்த சகோதரர்கள் குவைத் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தனர், தொடர்ந்து புதிய சகோதரர்கள் அறிமுகமும் மஜகவின் செயல்பாடுகள் குறித்தும் உரையாடப்பட்டது. *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு குவைத் மண்டலம் 55278478 - 60338005 - 55260018. E-mail: kuwaitmjk@gmail.com
மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டலத்தின் தேரா கிளை மிகுந்த எழுச்சியோடு நிறுவப்பட்டது..
மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவையின் துபை மண்டலத்தில் தேரா கிளை கூட்டம் 11-9-2016 வெள்ளி அன்று நடைபெற்றது. #மண்டல_செயலாளர்_யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஊடக செயலாளர் #ஜியாவூல்_ஹக், துபை மண்டல பொருளாளர் #பசூர்_இஸ்மாயில்_பாபு, மண்டல துணை செயலாளர் #கடலங்குடி_ஹர்பின், மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துபை மண்டலத்தின் #தேரா_கிளை #பகுதி_செயலாளராக_பரீத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேரா கிளையின் சார்பில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் சபீக் நன்றி கூற கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நிறைவு பெற்றது. ஏற்கனவே துபை மண்டலத்தில் ஹோரல் அன்ஸ், அல்-கூஸ், மற்றும் மம்ஜார் கிளை பகுதி செயலாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. -மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டல ஊடக பிரிவு.
மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…
நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய கலாச்சார பேரவையின் மார்க்க பிரிவாக செயல்படும் இஸ்லாமிய கலாச்சார பேரவை -IKP துபை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ: அப்துல் அஜிஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கீழ்காணும் வகையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பு செய்து #மண்டல_செயலாளர் யூசுப்ஷா பேசினார். அதன் படி: #துபை_மண்டல_பொருளாளராக பசூர் இஸ்மாயில் பாபு அவர்களும் #துணைச்_செயலாளர்களாக 1.கடலங்குடி ஹர்பின் அவர்களும் 2.கட்டிமேடு ஜாஹீர் அவர்களும் 3.தோப்புத்துறை ஹம்தான் அவர்களும் 4.பண்டாரவாடை அசீப் அவர்களும் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை(IKP) செயலாளராக லால்பேட்டை சபீக் அவர்களும் பகுதி செயலாளர்களின் முதற் பட்டியல்: 1.அல் கூஸ் பகுதி செயலாளராக காயல்பட்டினம் சபீர் அவர்களும் 2.ஹோரல் அன்ஸ் பகுதி செயலாளராக முத்துப்பேட்டை அசார் அவர்களும் 3.மம்சார் பகுதி செயலாளராக காட்டுமன்னர்குடி அஹமது அவர்களும் (செயற்குழு உறுப்பினர்களில் மாற்றம் இல்லை) செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுது. இக்கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் நன்றி கூறினார்.எதிர்கால செயல்பாடுகள் மற்றும் புதிய சிந்தனைகள் பேசப்பட்டு கூட்டம்