திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார். மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார். மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
சேலத்தில் ஹாதியாவை வரவேற்ற மஜக நிர்வாகிகள்…!
சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா தலைமையில் மஜக மற்றும் மாணவர் இந்திய நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலார்கள் O.S.பாபு, சேட் ரஃபி, சையது முஸ்தபா, இளைஞரணி செயலாளர் அஸ்லம் கான், பகுதி நிர்வாகிகள் சாகுல், மொஹித் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாநகர்_மாவட்டம்
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் P.M.A. பைசல், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, IKP மாவட்டசெயலாளர் அனீபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் தனி தனியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்த கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. 2. டிசம்பர் 6 ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை விளம்பரபடுத்த அனைத்து பகுதிகளுக்கும் சுவரொட்டி மற்றும் நோட்டீஸ்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. 3.வருகின்ற 27.11.17 அன்று கிழக்கு பகுதியின் சார்பில்
நடிகர் விஜய்க்கு குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது..! மாணவர் இந்தியா
சென்னை.நவ.15., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பாக அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலையில் ஆதாரங்கள் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசையும், காவல்துறையும் கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில், தோழர் அன்புவேந்தன், ஃபெலிக்ஸ், திருமுருகன் காந்தி, இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் அஸாருதீன் சோற்றுக்காக மதம் மாறவில்லை சுய கௌரவத்திற்காக மாறினேன் என்று மாணவர் வாக்குமூலம் கொடுத்து தற்கொலை செய்யும் அளவுக்கு கல்லூரி பேராசியர்களின் மனதில் மதவெறி புகுந்துள்ளது ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறினார். மேலும் இப்படி கல்வியிலும், ஆசிரியர்களும் ஒரு சேர்ந்து குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவது எஜமான் மோடியின் திருப்தியை பெற்று பதவி சுகம் அடைய செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிவதாக குற்றம் சாட்டினார். ஜோசப் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூகம் ஜோயல் பிரகாஷை மறந்துவிட்டது வருத்தமளிக்கிறது என்று பதிவு செய்தார். இதற்குள் இருக்கும் மத அரசியலை
மங்கலப்பேடையில் மஜகவின் மாபெரும் எழுர்ச்சி..
கடலூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலப்பேட்டை கிளை சார்பாக புதிய அலுவலகம் மற்றும் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் N.N.இப்ராஹிம் திறந்து வைத்தார், கொடிகளை தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பைஸில் முன்னில்லை வகித்தனர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அஜீஸ் கான் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர் மற்றும் இளைஞர் அணி பொருலாளர் ஹியாத் மற்றும் நகர, ஒன்றிய மஜக மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் பஃகத் மற்றும் நபில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 12.11.17