ஜன.17., குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் மஜக வின் மாணவர் அமைப்பான "மாணவர் இந்தியா" & கோபி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 29-01-2017 சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற உள்ளது. தகவல் : மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்டம். 17_01_2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டம்: மாணவர் இந்தியா சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகம்…
ஜன.17., மாணவர்களால் சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டத்தில் மாணவர் இந்தியா சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது . இதில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முகம்மது அஸார் தீன், மாநில துணை செயலாளர் பஷீர் அஹ்மத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஃபைசல் மற்றும் மத்திய சென்னை மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தகவல் : மாணவர் இந்தியா - ஊடாகபிரிவு, சென்னை, 17_01_17
சாலை மறியலில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா, மஜக இளைஞர் அணி செயலாளர்கள்…
ஜன.17., இன்று அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நடந்த மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ஏ.அஸ்கர் கான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பவாசிர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில் நுட்ப அணி, மதுரை தெற்கு 17_01_17
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா பங்கேற்பு…
ஜன.17., சென்னை கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் தலைமையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பைசல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கைது செய்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டுமென மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் தெரிவித்துள்ளார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகப்பிரிவு
ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய இயக்குனர்.கௌதமன் மீதான தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கண்டனம்…
மாணவர் இந்தியா -பத்திரிக்கை அறிக்கை தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய தமிழின போராளி இயக்குனர்.கௌதமன் அவர்களை காவல்துறை அறம் தவறிய வழியில் தாக்கியது கண்டனத்திற்க்குரியது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே தாக்குதல் நடத்துவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறோம்.இது போன்று தாக்குதல்கள் தொடருமேயானால் மாணவர்களின் ஆதரவை மாணவர் இந்தியா உணர்திக்காட்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவண், முஹம்மது அஸாருதீன் மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா