சென்னை.ஏப்.18., காவிரி போராட்டத்தில் சிறை சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று மஜக தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தனியரசு MLA, மஜக மாநில செயலாளர்கள் சாதிக்பாட்ஷா, சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் ஷமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாணவர் இந்தியா மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது, கொள்கை விளக்க பேச்சாளர் J.S.மீரான் ஆகியோர் சந்தித்தனர். இவர்களுடன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் ஆகியோரும் சந்தித்தனர். மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவூஃப் ரஹீம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, பூவை நகர செயலாளர் யாசர் அராஃபத் ஆகியோரும் உடனிருந்தனர். மாணவர் இந்தியாவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கபீர் அஹமது(PRO), கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஸரப் ஆகியோரும் மஜக
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!
நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பங்கேற்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், காவிரிக்காக போராடிய போராளிகளை பொய் வழக்கு சுமத்திய தமிழக காவல் துறையை கண்டித்தும் கண்டன உரையை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் உசேன், ரஹ்மான், நகர நிர்வகிகள் அமிர், அன்சர், ரஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா 15.04.2018
திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!
திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 07.01.18
கொள்ளுமேடு நகர பொதுக்குழு மற்றும் முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கூட்டம்..!!
கடலூர்.ஜன.01., கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் J. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் மாத வரவு செலவு கணக்குகளை நகர பொருளாளர் I. முஹம்மது பைசல் அவர்கள் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதவை கண்டித்து மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் லால்பேட்டை முஸரப் உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் V.முஹம்மது ரியாஸ் அவர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கொள்ளுமேடு_நகரம் #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜரான மாணவர் இந்தியா நிர்வாகிகள்..!!
சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரனைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, ஊடக பிரிவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர்ஆஜராகினர். விசாரனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கோபி மற்றும் பிரசாத் உடன் இருந்தனர். செய்தி; #ஊடக_பிரிவு #மாணவர்_இந்தியா