சென்னை.ஜூலை.23., கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மேதகு டாக்டர் A.M.சின்னப்பா அவர்கள் ஆயராக பொறுப்பேற்று 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பாராட்டு விழா அதன் தலைவர் இனிகோ.இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆலந்தூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் பங்கேற்று பேசிய #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், P.V.சின்னப்பா அவர்கள் தமிழை ரோமுக்கு எடுத்து சென்றவர் என்றும், விளிம்புநிலை மக்களின் முகம் என்றும் பாராட்டினார்.முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள். ஐரோப்பிய கிறித்தவர்கள் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டார்கள் .கிரித்தவ மக்கள் ; கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், இலவச மருத்துவமனைகள் என பல அரும்பணிகளை ஆற்றி வருகிறார்கள். இனி நேரடி அரசியலிலும் அவர்கள் ஈடுபட்டு களப்பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திரு பீட்டர் அல்போன்ஸ், திரு ரபி பெர்னாட், அப்போலோ அனிபா, நெல்லை முபாரக் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக நீதி ஆர்வலர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் காஞ்சி வடக்கு(மா) செயலாளர் ஜிந்தா மதார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் A.யூசூப், MMH.முபாரக் மற்றும் காஞ்சி நிர்வாகிகள் ஆலந்தூர் சலீம், தாம்பரம் ஜாஹிர், பம்மல் சௌக்கத் அலி
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகை தொகுதி MLA குறித்த பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு நூல் வெளியீடு..!
#நாகை_தொகுதி_MLA_குறித்த_பத்திரிக்கை_செய்திகள்_தொகுப்பு_நூல்_வெளியீடு..! நாகை. ஜூலை.23., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் தொகுதி மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பொதுவாழ்வில் செயலாற்றிய சீர்மிகு பணிகள் குறித்து, கடந்த 20.05.2016 முதல் 30.06 2018 வரை இரண்டு ஆண்டுகள் வெளிவந்த பத்திரிக்கை செய்தி தாள்களின் தொகுப்பு நூலினை மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் வடகரை M. பரகத் அலி அவர்கள் வெளியிட, அதனை பொதுச்செயலாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மஜக மாவட்ட பொருளாளர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட துணை செயலாளர் பொரவச்சேரி ஜாகீர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட மருத்துவ சேவை அணிச்செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மனித உரிமை அணி செயலாளர் தெத்தி ஆரிப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தம்ஜூதீன் மற்றும் அலுவலக செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொகுதி மக்களின் பார்வைக்காக இந்த தொகுப்பு நூல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை வடிவமைத்த அலுவலக செயலாளர் சம்பத்குமார் அவர்களை, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாராட்டினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் சங்கந்தியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
திருவாரூர்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமையில் எடையூர்-சங்கந்தி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மஜக கொடியை கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், கத்தார் மண்டல துணை செயலாளர் சமீர், பஹ்ரைன் மண்டல ஆலோசகர் முகமது ஜான், முத்துப்பேட்டை நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முகம்மது, நாச்சிகுளம் ஜமாத் முன்னால் தலைவர் ஹாஜி M.M. அப்துல் சுக்கூர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக எடையூர் சங்கந்தி ஜமாத்தார்களும், சங்கேந்தி முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் மனோகர் அவர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இக்கொடியேற்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக எடையூர்-சங்கந்தி கிளை நிர்வாகிகள் அன்வர்,தமீம் அன்சாரி, தௌலத் முகம்மது, ரேடார் தாவூத், முகம்மது இக்பால் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர் திருத்துறைபூண்டி, கட்டிமேடு, முத்துப்பேட்டை, நாச்சிகுளம் ஆகிய ஊர்களிலிருத்து பெரும்திரளான தொண்டர்கள் வாகனப்பேரணியாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம்.
தமிழ் மொழியை பாதுகாப்பது நம் கடமை..! பினாங்கில் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சு..!!
பினாங்கு.ஜூலை.17., மலேஷியாவின் புகழ் பெற்ற பினாங்கு தீவில் #லீகா_முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு தமிழ் அமைப்பின் பிரமுகர்கள் இணைந்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோரின் சட்டமன்ற பணிகளை பாராட்டி வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தனியரசு அவர்கள், மலேஷியாவில் தமிழ் சமூகங்களின் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும். குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் உழைப்பு குறித்தும், விருந்தோம்பல் பண்பு குறித்தும், தமிழின் மீது காட்டும் ஆர்வம் குறித்தும் நகைச்சுவை ததும்ப பேசினார். மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசும்போது, இது பினாங்கில் தான் பங்கேற்கும் ஐந்தாவது நிகழ்ச்சி என்றும், அதற்கு #ஈமான் மற்றும் லீகா முஸ்லிம் போன்ற அமைப்புகளே காரணம் என்றும் நன்றி பாராட்டினார். மலேஷியாவின் பொருளாதார, வணிகம், பண்பாட்டு தளங்களில் இந்திய- தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பங்களிப்புகள் குறித்து சிலாகித்தார். எதிர்காலத்தில் மலேஷிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்றும், இதர தமிழ் சமுகங்களோடு அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழியை கடந்த காலத்தில் பாதுகாத்து வளர்த்தது போல, எதிர்காலத்திலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில், சமூக
சேவை அரசியலில் பெருவாரியாக இணையும் மக்கள்..! 350க்கும் மேற்பட்டோர் மஜகவில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்..!!
வேலூர்.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சார்பில் தரணம்பேட்டையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் செயலாளர் #S_அனிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாம்முத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமை மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் துவக்கி வைத்தார். இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக வந்து தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்தனர், #மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், மஜக-வினரின் மக்கள் சேவைப் பணிகளும், பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி அவர்களின் சட்டமன்ற பணிகளும் தங்களை வெகுவாக ஈர்த்தாகவும், இன்னும் குடியாத்தம் நகரம் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் இது போல தீவிர உறுப்பினர் சேர்க்கை சிறப்பு மையங்கள் தொடங்கி, சேவை அரசியலில் பல்வேறு உறுப்பினர்களை சேர்க்க தாங்களும் துணை புரிவோம் என்றனர். இதில் முன்னால் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், MJTS ஆம்பூர் நகர செயலாளர் முஜம்மில், குடியாத்தம்