(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். காஷ்மீரில் நடைபெறும் மண்ணுரிமைக்கான அரசியல் போராட்டம் இது போன்ற பயங்கரவாத செயல்களால் திசைமாற்றப்படுவது வேதனையளிக்கிறது. இதனை பெரும்பாலான காஷ்மீர் மக்கள் விரும்பாத போதும், பயங்கரவதிகளால் அவர்களின் பாரம்பரிய பெருமையும் , சமூக ஒற்றுமையும் சீர்குலைய அவர்கள் அனுமதிக்க கூடாது. அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் அச்சம்பவத்தில் இதர பக்தர்களை தனது சாமர்த்தியமான திறமையால் பாதுகாத்த பேருந்து ஓட்டுநர் சலீம் அவர்களை மனதார பாராட்டுகிறோம். அவர் இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளங்களை பேணிப் பாதுகாத்திருக்கிறார். இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 12.07.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
பெங்களூரில் M.C.ராஜ் நினைவேந்தல்_நிகழ்ச்சி! M.தமிமுன் அன்சாரி, திருமாவளவன் பங்கேற்பு..!
பெங்களூர்.ஜூலை.11., விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி 'CERI' என்ற தேர்தல் சீர்திருத்த அமைப்பை உருவாக்கிய M.C.ராஜ் அவர்கள் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி 10/07/2017 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக இணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன், M.C.ராஜ் அவர்களின் மனைவியும், சமூக செயல்பாட்டாளருமான ஜோதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். M.C.ராஜ் அவர்களின் பணிகளை கூறும் "His Smile had Millions of Meanings" என்ற நூலை M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING 10.07.2017
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!
கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ''இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும், மனிதஉரிமை - சமூக நீதி ஆர்வலர்களும் பங்குகொண்டது பெரும்மகிழ்ச்சியை தந்தது. அதிமுக, திமுக, மதிமுக, காங்ரஸ், தமாக, தேமுதிக, பாமக, விசிக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், SDPI நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குகொண்டு "சமூக நல்லிணக்கத்தை" பேசி கைத்தட்டளை வாங்கினர். நாம் ஒருதாய் மக்கள், மதவெறியை வீழ்த்த வேண்டும், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைவரின் வாயில் இருந்தும் கட்சி எல்லைகளை தாண்டி எதிரொலித்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்ச்சாகம் பொங்க பங்கேற்றனர். சால்வைகள் இல்லை, மாலைகள் இல்லை, அரசியல் சவடால்கள் இல்லை ஆனால் எல்லோரின் உணர்வுகளிலும் ஒற்றுமை இருந்தது. மேலும் சமூக சேவையில் பாடுபட்ட K.C.தம்பி (எ) அச்சா, அரிமா சங்க தலைவர் லட்சுமி நாராயணன் போன்றோர்க்கும் அகில இந்திய சிறுபான்மை நல
ஞானையா மரணம்! வரலாற்று ஆய்வாலரை இழந்திருக்கிறோம்..! மஜக இரங்கல்…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) முதுபெரும் இடது சாரி இயக்க ஊழியரும், வரலாற்று ஆய்வாளரும், பன்னூல் ஆசிரியருமான டி.ஞானையா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழமான வருத்தங்களை அளிக்கிறது. இளம் வயது முதல் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனைத்துக்கொண்டு அதில் செயல்வீரராகவும், சிந்தனையாளராகவும் இயங்கினார். ஜனசக்தியில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைவருக்கும் அரசியல் பாடங்களாக இருந்தன. அவர் எழுதிய நூல்கள் யாவும் வரலாற்று மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளாக இருந்தன. இந்திய முஸ்லிம் சமுதாயம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அனைவரும் ஆய்வு செய்யகூடிய அரிய தொகுப்புகளாக இருக்கின்றன. அவரது மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும் நூலக உலகிற்கும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து குடும்பத்தினர்கள், மற்றும் தோழர்கள் அவரது வாசகர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனித நேய ஜனநாயக கட்சியும் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறது. இவன் M.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09/07/2017
மரக்கன்று நடும் விழா மஜக பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் பங்கேற்பு…!
கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழிநுட்ப அணி, #MJK_IT_WING கடலூர் தெற்கு மாவட்டம். 09.07.2017