ஏப்.18.,நாகை கமாலியா பள்ளிவாசல் ஜமாத்தார்களை நாகை தொகுதியின் அதிமுக-மஜக கூட்டணியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றபோது. தகவல் : மஜக ஊடகப் பிரிவு
நாகப்பட்டிணம்
களை கட்டிய மஜகவின் நாகூர் பரப்புரை…
ஏப்.17., நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாகூரின் கடை விதிகள் குலுங்கின. பெரும் திரளான தொண்டர்களோடு அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி நாகூர் கடை வீதிகளில் களமிறங்கினார்.வழியெங்கும் உற்சாக வரவேற்பு கிடைக்க,மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே வாக்கு சேகரித்தார். ஒவ்வொருவரும் அவரை கட்டிப் பிடித்து கைக் குலுக்கினர்.இளைஞர்கள் போட்டிப் போட்டு 'செல்ஃபி'எடுத்தனர்.நீங்க சிறப்பாக ஜெயிப்பிங்க என்றும் நல்ல தலைவரா சமுதாயத்தை வழி நடத்துங்க....என்றும் 'எங்க ஓட்டு உங்களுக்குத்தான் 'என்றும் மக்கள் வாழ்த்தி வரவேற்றனர். அவருடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஓடிவந்து நலம் விசாரித்தனர்.இனிப்பு கடைகளுக்கு சென்றபோது கடைக்காரர்கள் குலாப்ஜாமூன் ,பால்கோவா போன்றவற்றை ஊட்டி விட்டு அன்பை வெளிப்படுத்தினர். கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்களோடு அவர் கைக்குலுக்கி வாக்கு சேகரித்தார். கடை முதலாளிகள் சால்வை அணிவித்து'நீங்க சிறந்த வேட்பாளர்'என வாழ்த்தினர். நாகூர் தர்ஹா வாசலில் வாக்கு சேகரித்தப் போது,பல மாவட்டங்களை சேர்ந்த யாத்ரீகர்கள் ஓடிவந்து தங்களை வேட்பாளர் தமிமுன் அன்சாரியுடன் அறிமுகப்படுத்தி படம் எடுத்துக் கொண்டனர். நாகூர் இன்றைய பிரச்சாரம் ஒரு நட்சத்திர நிகழ்வாக அமைந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. தகவல்: மஜக ஊடகப் பிரிவு
நாகை பஜாரில் மக்களோடு மக்களாக மஜக வெற்றி வேட்பாளர்…
நாகை தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் M.தமிமுன்_அன்சாரி நாகை கடைவீதிகளில் மக்களோடு மக்களாக கலந்து உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ... மக்கள் அவரை சுற்றிநின்று கூட்டம் கூட்டமாக கைகுலுக்கி மகிழ்ந்து வாழ்த்து கூறினர் . இப்படியே எப்போதும் சகஜமாக இருங்கள் என்றும் கூறினர் ... - மஜக ஊடகப் பிரிவு
சகோதரர் AS.அலாவுதீன் அவர்களுடன் நாகை சட்டமன்ற மஜக வேட்பாளர சந்திப்பு…
ஏப்.11.,தமுமுகவின் முன்னால் துணைப் பொதுச்செயலாளரும், TNTJ-வின் முன்னால் பொதுச்செயலாளருமான சமூக ஆர்வலர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்களை மஜக வின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார். இருவரும் நீண்டகாலமாக சகோதரத்துவ உறவுகளுடன் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஊடகத்துறையில் வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி , வழிநடத்தியவர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைப்புகள் பிரிந்த நிலையிலும் , நெருக்கடியான பல்வேறு காலக் கட்டங்களிலும் இருவரும் தங்களது நட்பை முறிக்காமல் பயணித்து வருகிறார்கள் . -மஜக ஊடகப்பரிவு