நாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சரும், களமச்சேரி தொகுதி MLA V.K. இப்ராஹீம் குஞ்சு, முப்பத் தடம் கிராம முஸ்லிம் ஜமாத் செயலாளர் சாஜஹான், பிரைமரி முஸ்லிம் லீக் செயலாளர் இஸ்மாயில், பிரைமரி முஸ்லிம் லீக் துணை செயலாளர் அஷ்ரப், கடங்கலூர் ஆண்டனி மாஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் M. பரகத் அலி, மா.து. செயலாளர் ஜாஹீர் உசைன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மு.மா.து.செயலாளர் ஹமீது ஜெகபர், மஞ்சகொல்லை கிளை செயலாளர் சேக் அலி, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது, மஞ்சகொல்லை கிளையை சேர்ந்த 3 சகோதரர்கள் , பொரவாச்சேரி கிளையை சேர்ந்த 5 சகோதரர்கள் , மருங்கூர் பிரவின் குமார் ஆகியோர் கேரளா சென்று பொருட்களை நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 08.09.2018
நாகப்பட்டிணம்
மஜக மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் இல்லத் திருமணவிழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு..!!
நாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இடைவிடாத கட்சி பணிகளுக்கிடையே நேற்றைய தினம் பூருனேவில் இருந்து வந்த பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla,நாகை சட்டமன்ற உறுப்பினர் அவரின் உடல்நிலையும் பாராமல் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள் உடன் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரகத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #நாகை_தெற்கு_மாவட்டம்.
நாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு..! மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!
நாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார். பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல தரப்பிலும் இவ்வாறு நிவாரணப் பொருள்கள் நாகப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் இதற்கான முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், தொகுதி மக்கள் போர்வைகள், கைலிகள், அரிசி மூட்டைகள், பிஸ்கட் பெட்டிகள், சிறுவர் ஆடைகள், துணிமணிகள், என 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குவிந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். நாகையிலிருந்து புறப்படும் காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மூலம் கொச்சினுக்கு அனுப்ப, லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டது. அதை தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார். இப்பொருள்களை மஜக நாகை (தெற்கு) மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் பத்து பேர் கொண்ட மஜக குழு, கேரளாவுக்கு எடுத்து செல்கிறது அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மூலம் கொச்சின், அலுவா போன்ற பகுதிகளில் வினியோகப்பட உள்ளது. ஏற்கனவே தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனது 1 மாத சம்பளத்தை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை தமிழக அரசு காலதாமாதயின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நானும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் இதே கோரிக்கையை பல முறை வலியுறுத்தி இருக்கிறோம். அதன் விளைவாகவே பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எனவே இவர்களின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் வரலாறு, முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே 7 பேரையும் சோனியா காந்தியின் குடும்பம்
வேதை நகர மஜக ஆலோசனை கூட்டம்!
நாகை. செப்.03., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார். கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வசூல் செய்யபட்ட தொகையை நகர செயலாளர் அகமதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். #தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது. #வேதை நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றுவது. #தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் மன்சூர், MKP துபாய் மண்டல துணை செயலாளர் ஹம்தான், மீனவரணி மாவட்ட செயலாளர் செல்வமணி, IT WING மாவட்ட துணை செயலார் முபின் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 02/09/2018