பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். அப்போது நாகை முஸ்லிம் ஜமாத் அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் வருகை தந்தார். அங்கு ஜமாத்தினர் வரவேற்பு அளித்து அவருடன் உரையாடினர். பிறகு அவர் MLA வாக இருந்த போது, அவரது முயற்சியில், ONGC மூலம் சேவை நிதியில், சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டார். காலை நேரத்தில் பெண்கள் நடைபயிற்சி செய்யவும், மாலை நேரங்களில் இருபாலரும் குடும்பத்துடன் பொழுது போக்கும் வகையிலும் இக்குளம் சீரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அவரது ஆலோசனைகளையும் ஜமாத்தினரிடம் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
நாகப்பட்டிணம்
மகிழியில் மஜக புதிய கிளை தொடக்கம் நிர்வாகிகள் தேர்வு!
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட மகிழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகம் புதிதாக அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இக்கூட்டம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது தலைமையிலும், திருப்பூண்டி கிளை செயலாளர் T.ஹாஜா முயீனுதீன் மற்றும் திருப்பூண்டி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது. தொடர்ந்து மகிழி புதிய கிளை நிர்வாகிகளாக அப்துல் மஜீது, முகம்மது சித்திக், அபுதாஹிர், அசாருதீன் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்று படிவங்களை பூர்த்தி செய்து தங்களை மஜகவின் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 22.07.2021
அமைச்சரை சந்தித்து ஊரின் கோரிக்கைகளை கையளித்த மஜக!
ஜூன்.01, நேற்று நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஆய்வில் அமைச்சர் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம் ஷா தலைமையில் சந்தித்து ஊரின் தேவைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். அதனை பெற்று கொண்டு உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
ஷா நவாஸ் MLA , மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு!
வேதை.மே.09., #விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகையில் புதிதாக வெற்றிப் பெற்றவருமான #ஷா_நவாஸ்_MLA அவர்கள், இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்களை தோப்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தனது வெற்றிக்கு மஜகவினர் சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு "பெரியார் அன்றும், என்றும்" என்ற நூலை பொதுச்செயலாளர் அவர்கள் பரிசு அளித்தார், மேலும் நாகையில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தனது ஆலோசனைகளையும் வழங்கினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
நாகை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,வதிஸ்ட்டாச்சேரியில் புதிய கிளை உதயம்.
நாகை.செப்.10., நாகை வடக்கு மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம், வதிஸ்ட்டாச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்க கூட்டம் 09.09.2018 ஞாயிறு அன்று இரவு 8 மணியளவில் நடைப்பெற்றது.இதற்கு நாகை வடக்கு மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கை தாஜ்தீன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கிளை செயலாளராக M.யாசர் அரபாத்,கிளை பொருளாளராக S.அக்பர் அலி, துணை செயலாளராக சுபைது,மாணவர் இந்தியா செயலாளராக S.ஹாஜா ஆகியோர்கள் தேர்வு ஒரு மனதாக செய்யப்பட்டனர். செப்டம்பர்-15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகளுக்கு நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் சாதி,மத,அரசியல் பேதமின்றி பொது மன்னிப்பு கீழ் விடுதலை செய்ய வேண்டுமென ஆட்சியர்களிடம் வலியுறுத்துவது. மக்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல்,டீசல்,கேஸ் விலையை உயர்த்தி கொண்டுபோகும் மத்திய அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் கிளை செயலாளர் M.யாசர் அரபாத் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #நாகை_வடக்கு_மாவட்டம்.