சென்னை.நவ.10.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக்கூட்டம் கட்சியின் இணை பொதுச் செயலாளரும் டிசம்பர் 6 போராட்ட ஒருங்கிணைப்பாளருமான J.S ரிபாய் அவர்கள் தலைமையில் 9.11.2018 அன்று மாலை நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக சார்பாக நடக்க இருக்கும் டிசம்பர் 6 விமான நிலைய முற்றுகை போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை மாநில நிர்வாகிகள் வழங்கினர். இக்கூட்டத்தில் வட சென்னை (கிழக்கு & மேற்கு) மத்தியசென்னை (மேற்கு & கிழக்கு) தென்சென்னை (கிழக்கு & மேற்கு) திருவள்ளூர் ( கிழக்கு & மேற்கு) காஞ்சி (வடக்கு & தெற்கு) ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை மண்டலம்
Author: Tharick
மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..!
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய தவறிய வர்களுக்கு . மீண்டும் பதிவு செய்யலாம் என அரசு வேலை வாய்ப்பு பயிற்ச்சி துறை அறிவித்துள்ளது பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 25.01.2019 இடம்: அனைத்து மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள். ஆகவே சகோதர, சகோதரிகள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையகம் தொடர்புக்கு. 99403 11477, 99520 38767.
பல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..!
காஞ்சி.நவ.04.., பல மாவட்டங்களில் பரவிவரும் டெங்கு போண்ற வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள், பெரியவர்கள், உட்பட தமிழகம் முழுவதும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை கட்டுபடுத்த மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல மாவட்டங்க ளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியும் விழிப்புணர்வு முகாமும் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரம் நகரம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று பல்லாவரம் நகரச் செயலாளர் ஷானவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவா் முஹமது யாக்கூப் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக C .கனேசன் Ex.Mc, திமுக ரங்கநாதன் ஆகியோா்கள் கலந்து கொண்டனா். நிலவேம்பு கசாயம் வாங்கி 600 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பருகி பயன் பெற்றனர். இந்நிகழ்வில் கண்டோன்மெண்ட் அப்துல் சமது, நகரப் பொருளாளர் A.ஜாகித் அஷ்ரப், நகர துணைச் செயலாளர்கள் V.S.முஹம்மது அஜீஸ், A.ஜெய்னுல் ஆபிதீன், M.I.அக்பர் அலி. இளைஞரணி செயலாளர் S.காதர்கான், இ.அ.து.செ.C. சுலைமான், மருத்துவ அணிச் செயலாளர் Z.நயீமுல்லா, மனித உரிமை அணிச் செயலாளர் Y.முஸ்தபா, 2வது வார்டு மருத்துவ அணிச் செயலாளர்
தென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!
சென்னை.நவ.03..,மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயல் வீரர் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா அவர்களின் தலைமையில் நேற்று (02.11.2018) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பை வழங்க கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 8 விமான நிலையங்களை முற்றுகை போராட்டம் நடத்த தலைமை முடிவெடுத்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையம் முற்றுகை சம்மந்தமாக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்களிடம் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து போராட்ட களத்திற்கு மக்களை திரட்டுவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயளாலர் J.சீனி முஹம்மது, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். ஆலோசனை கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாலர் குணங்குடி J. S மீரான், மாவட்டப் பொருளாளர் காஜா ஷரிப், மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது கனி, வசீம், வர்த்தகர் அணி செயலாளர் ஜலீல், தொழிலாளர் அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் பாசிப்பட்டிணத்தை சேர்ந்த அப்பாஸ்,