MLA_க்கள்_M.தமிமுன்_அன்சாரி_உ.தனியரசு_கருணாஸ்_வேண்டுக்கள்! ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் முன்னின்று தமிழகத்தில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது. தமிழர்களுக்கு இந்தியாவெங்கும் பெரும் மரியாதை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை ஆளுநர் அவர்கள் பிறப்பித்தார்கள். இது தன்னெழுச்சிமிக்க, நேர்மையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இன்று நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அவசரச்சட்டம் குறித்து ஆளுநர் உறுதியளித்து, அதன்பேரில் மாலை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்களை குறிக்கோள் நிறைவேறிய காரணத்தால் போராட்டத்தை கைவிட்டு வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. அவர்கள் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் இதனால் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒருபுறமும், தள்ளுமுள்ளு ஒருபுறமும் நடைபெற்றது வருந்தத்தக்கது. இதில் மிகுந்த நிதானம் கடைபிடித்திருக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் சென்னையில் சில அவசரக்காரர்கள் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீவைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது கண்டிக்கதாகும். இதற்கு முன்பாக சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்களை வெளியேற்ற காவல்துறை எடுத்த முயற்சிகள் பொதுமக்களிடம் தவறான எண்ணங்களை உண்டு பண்ணியிருப்பதாகவும், அதுவே பதட்டத்திற்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது அமைதியை கட்டிக்காக்க அனைவரும்
Author: admin
வேலூர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டக்களத்தின் துப்புரவு பணியில் மஜக தோழர்கள்…
காஞ்சி வடக்கு மாவட்டம் மாணவர்கள் போராட்டத்தில் மஜக மற்றும் மாணவர் இந்தியா…
ஜன.22., காஞ்சி வடக்கு மாவட்டம் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு உணவுகள் வழங்கியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்... தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, காஞ்சி வடக்கு. 22_01_17
நாகையில் நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநாடு…நாகை MLA பங்கேற்ப்பு!
மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் 7ஆவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பல்வேறு நிகழ்வுகள்…
ஜன.22., மதுரை வடக்கு மாவட்டத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டக்கள் மற்றும் மறியல்களில் மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உணவு பொட்டலங்கள் குளிர்பானம், தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. * மதுரை தமுக்கத்தில் மாணவர்கள் சார்பாக நடைபெறும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி மாவட்ட துணைசெயலாளர் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் மஜக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டடு உணவு பொட்டலங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. மற்றும் தமுக்கம் அந்த பகுதியில் துப்புறவு செய்யும் பணிகள் நடைபெற்றது. * உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட மற்றும் ஊர்வலத்தில் மஜக மதுரை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் ஜமாலுதீன் கலந்து கொண்டர். * மதுரை ஒத்தக்கடை பகுதி மக்கள் சார்பாக நடைபெற்ற மறியல் மஜக மாவட்ட துணைசெயலாளர் ஒத்தக்கடை பரூக் தலைமையில் சுலைமான், சிக்கந்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டர்கள். * மலையாைத்தான் பட்டியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார் தலைமையில் மஜக