திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். பிறகு தஞ்சை சாலையில் உள்ள மஹமுதியா பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்த இலவச மோர் விநியோகத்தை உற்சாகத்தோடு திறந்து வைத்தார் . முன்னதாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அஷ்ரப் அவர்களின் அலீஃப் கல்யாண பிரியாணி கடையை பொதுச் செயலாளர் திறந்து வைத்தார் . நிறைவாக பொதுச் செயலாளரும் , தலைமை ஒருங்கிணைப்பாளரும் திருச்சி அன்வாருல் உலூம் மதரசாவுக்கு வருகை தந்தனர் . அவர்களை நூருல்ஹக் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று உரையாடினார். உடன் துணை பொதுச் செயலாளர் ஈரோடு S.M.பாரூக், மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பொருளாளர் அஷ்ரப் அலி, துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ரபீக், ஜம் ஜம் பஷீர், காட்டூர் பஷீர், மாணவர் இந்தியா மைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தென்னூர் சதாம், தொழில் சங்கம் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட், ஆழ்வார் தொப்புகிளை நிர்வாகிகள், அரியமங்கலம்
Author: admin
காயல்பட்டினத்தில் மதுக்கடையை அனுமதிக்க கூடாது மாவட்ட ஆட்சியரிடம் மஜக மனு…
தூத்துக்குடி,ஏப்.10., காயல்பட்டிணம் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பிரதான சாலையான காயல்பட்ட்டணம் புற வழிச்சாலையில் மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் காயல் நகர செயலாளர் ஜிபுரி, பொருளாலர் மீரான், மாவட்ட பொருளாலர் நவாஸ், மாவட்ட துணை செயளாலர் நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K.ராஸிக் முஸம்மில், நகர துனை செயலாளர் மொகுதும் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 10.04.2017
கல்லூரி விழாவில் மஜக & மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்பு..!
சென்னை.ஏப்.09., இன்று தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி சாதனையாளர்கள் நாள் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்றனர், மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி பாஷா அவர்கள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் , மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc., மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் ஜாவித் ஜாபர் MBA ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இவ்விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மத் ஹாலித் மற்றும் காஞ்சி தென் சென்னை மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் கபீர், மெய்தீன் அவர்கள் தலைமையில் மாணவர் இந்தியா மாணவச் செல்வங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனர் மூசா ஹாஜியார் அவர்களும், கல்லூரி செயலாளர் காதர் ஷா அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை. 09.04.2017.
நாகை நகரத்தில் மஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
நாகை.ஏப்.09., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகிய ஏராளமானோர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை நாகை நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம். 09.04.2017
வேலூர் மேற்கு மாவட்டம் காயிதேமில்லத் நகரில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர்.
வேலூர்,ஏப் 09., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட காயிதே மில்லத் நகரில் கிளை செயலாளர் R.சலாம் தலைமையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஒன்றிய பொருளாளர் W.ஆமீன், கிளை து.செயலாளர் K.ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட து செயலாளர் S.M.D.நவாஸ், ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். பின்பு அதிகமான இளைஞர்கள் தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி எழுச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 08.04.2017