சென்னை.ஜூலை.26., நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையிலுள்ள பெரியார் திடலில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைப்பெற்றது. இதில் மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது மற்றும் லால்பேட்டை முஸரப் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா சென்னை 26.07.2017
Author: admin
குவைத் மண்டலம் MKP மஹபுல்லா கிளை நடத்தும் “சுதந்திர இந்தியாவின் அவல நிலை” சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்.
குவைத்.ஜூலை.26: குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுல்லா கிளை சார்பில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுதந்திர இந்தியாவின் அவல நிலை" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் எதிர் வரும் 28/07/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கத்தா - 2, இஸாரா - 229, பில்டிங் -242 ல் சிறப்பாக நடைபெற உள்ளது. சுதந்திர உணர்வுள்ள மனிதநேய சொந்தங்களே கருத்தரங்கில் சங்கமித்து சாட்சி கூறுவோம். "மதத்தால் இஸ்லாமியன் மொழியால் தமிழன் நாட்டால் இந்தியன்" - போராடி பெற்ற சுதந்திரத்தில் நாம் ஆற்றிய பங்கை உலகிற்கு உணர்த்துவோம்" அன்புடன் அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING குவைத் மண்டலம். 55278478 - 60338005 - 65510446.
நீட் தேர்வு விவகாரம் கோவையில் மாணவர் இந்தியா துண்டுப்பிரசுரம் வினியோகம்!
கோவை.ஜூலை.26., நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் மாதிரி துண்டுப்பிரசுரத்தை கோவை மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் மாணவர்களுக்கு வினியோகம் செய்தனர். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா நிர்வாகிகள் அனிரூத், விபினேஷ், நவ்பல், அபு, சதீஷ் ஆகியோர் கோவை கிருஷ்ணா கல்லூரி, ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் ஹோப்காலேஜ் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வினியோகம் செய்தனர். இன்று மட்டும் 1000பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது . மாணவர் இந்தியா நிர்வாகிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துவருகிறார்கள்! தகவல்: ஊடகபிரிவு மாணவர் இந்தியா கோவை மாநகர் மாவட்டம் 26.07.17
சிறைவாசி சகோ.அபுதாஹிருடன் மஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கோவையில் சந்திப்பு!
கோவை.ஜூலை.26., சிறைவாசி சகோ.அபுதாஹிர் சம்பந்தமாக தொடர்ந்து மஜக மாநில மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அவர்சிகிச்சைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்நிலையில் அவர்வேறு ஒரு வார்டிற்கு மாற்றப்பட்டு அங்குஅவர் சித்ரவதைசெய்யப்படுவதாக நேற்று வலைதளத்தில் வதந்திபரவியது. அதுகுறித்து அதன் உண்மைதன்மையை அறிந்துகொள்வதற்காக நேற்று 25.07.17 செவ்வாய்கிழமை காலை மஜக மாநிலதுணை பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் TMS. அப்பாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கோவை மத்தியசிறைக்கு சென்று சிறைத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர். பிறகு சிறைத்துறையின் அனுமதி பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறைவாசி சகோ அபுதாஹிர் அவர்களை சந்தித்து பேசினர். அப்போது தான் இருக்கக்கூடிய வார்டில் நலமாக இருப்பதாகவும் எவ்விதமான தொந்தரவும் இல்லை என அபுதாஹிர் நிர்வாகிகளிடம் கூறினார். அவரிடம் மஜக நிர்வாகிகள் நலம் விசாரித்து விடைபெற்றனர். பிறகு மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்த மஜக நிர்வாகிகள் அபுதாஹிர் அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்குமாறும், அவரது கண் அறுவைசிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம்பேசினர். தொடர்ந்து அவரின் சிகிச்சை குறித்தும் அவரின் விடுதலை குறித்தும் மஜக மாநில கோவை
சீனியர் பத்திரிக்கையாளர் அசோசியேசன் சார்பில் நாகை MLA அவர்களுக்கு வாழ்த்து!
சென்னை.ஜூலை.26., தமிழ்நாடு சீனியர் பத்திரிக்கையாளர்கள் அசோசியேஷன் சார்பில் சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் சம்பந்தமாக குரல் கொடுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு. SENIOR JOURNALISTS ASSOCIATION, TAMIL NADU (REGD.NO.TN/NM/1995) பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மட்டும் உயர்த்த படாமல் நான்கரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததை தாங்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்த்தகோரி குரல் எழுப்பியதை தமிழக அனைத்து பத்திரிக்கையாளர்களும் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த அவையில் பத்திரிக்கையாளர் நாலனில் அக்கரை கொண்டு குரல் எழுப்பிய ஒரே சட்ட மன்ற உறுப்பினர் தாங்கள் என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறோம். தங்கள் கோரிக்கை படியே கடந்த 19.7.17-ல் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடியார் அவர்கள் ஓய்வூதியத்தை 10,000-ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு செய்துள்ளது தங்கள் கோரிக்கைக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு தங்கள் கடிதத்தில் குறிப்பட்டிருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, சென்னை. #MJK_IT_WING