சென்னை.ஜூலை.28., இன்று காலை சென்னையில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 11 பேர் கொண்ட குழுவை கடந்த வாரம் தமிழக அரசு நியமனம் செய்தது. அதில் அமைச்சர் நிலோபர் கபில், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா , சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இக்குழு இன்று சென்னை புதுக்கல்லூரியில் ஹஜ் கமிட்டியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கூடியது. அதன் அடிப்படையில், கோவை ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளராக 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கோவை CTC அப்துல் ஜப்பார் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட C.T.C. அப்துல் ஜப்பார் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT WING சென்னை. 28.07.2017
Author: admin
உத்தமபாளையம் நகர மஜக கூட்டம்…
தேனி.ஜூலை.28., தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று (27-07-2017) மஜக மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், மஜக கத்தார் மண்டல பொறுப்பாளர் முஹம்மத் உவைஸ், கம்பம் கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உத்தமபாளையம் நகர செயலாளராக உபயதுல்லாஹ் , நகர பொருளாளராக ஷேக் ஆகியோர் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி தேனி மாவட்டம். #MJK_IT_WING 28-07-2017
இது நிதிஷ்குமாருக்கு அழகல்ல…
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) இந்திய தேசிய அரசியலில் மரியாதைக்குரிய தலைவராக உருவானவர் நிதிஷ் குமார் அவர்கள் ராம் மனோகர் லோகியா , ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் அரசியல் தத்துவங்களில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். தேசிய அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றவர்களின் வரிசையில் மதிக்கப்பட்டவர். நேற்று அவர் நடத்திய அரசியல் கூத்துகளால், ஒரே நாளில் சந்தர்ப்பவாதி என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார். லாலுவின் குடும்ப அரசியலும், ஊழல் புகை மூட்டங்களும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் நாட்டின் நலன்கருதி காங்கிரஸ் முன்னெடுத்த சமாதானத்தை நிதிஷ் ஏற்காமல் போனது வருத்தத்திற்குரியது. அதே நேரம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் பெற்ற முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியான அடுத்த 1/2 மணி நேரத்திற்குள் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார் என்ற செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது. இப்படி ஒரு முன் திட்டமிடலோடு நடத்தப்பட்ட சந்தர்ப்பவாதத்தை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவும் நிதிஷ்குமார் போன்ற தலைவர்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை. கொள்கை அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்தால் வரவேற்றிருக்கலாம்.நிதிஷ்
அரசினர் உயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த தீவிர முயர்ச்சி செய்த மஜக மாநில பொருளாளர்க்கு நன்றி…
சென்னை.ஜூலை.28., மவுண்ட்ரோடு, தாயார் சாகிப்தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியை +1,+2 மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துரை அமைச்சர்.மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கும், பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க தீவிர முயற்ச்சி செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுடப அணி, சென்னை. #MJK_IT_WING 28.07.2017
காவிரிப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள்!
#காவிரிப்பகுதியை_வேளாண்_மண்டலமாக_அறிவிக்க_வேண்டும் ! #சிறுபான்மை_கல்லூரிகளின்_சிக்கல்களை_இலகுவாக்க_வேண்டும் ! #நல்ல_திரைப்படங்களை_அடையாளம்_கண்டு_அரசு_ஊக்குவிக்க_வேண்டும்! #ரோஹிங்கியா_மக்களை_பாதுகாக்க_வேண்டும்! சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள் ! (கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் நிறைவு பகுதி) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே … #காவிரிப்பகுதியை பாதுகாக்க வேண்டும் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை சமவெளிப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே, காவேரி ஆறும் அதனுடைய கிளை நதிகளும் பாயக்கூடிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி ஆகியவைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்து, அங்கு விவசாயத்திற்கு எதிராக எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தாமல் விவசாயத்தைப்பாதுகாக்க மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு அறிவிப்பு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுபோன்று, தட்கல் முறையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விவசாய மின்னிணைப்புகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. தஞ்சை உள்ளிட்ட டெல்டா விவசாயிகளின் நலன்கருதி, மேலும் 3000 மின்னிணைப்புகளை காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும். அதில் 1500 இணைப்புகளை தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். #கல்வி நிலையங்களின் கோரிக்கைகள் சிறுபான்மைக் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை