கடலூர்.ஆக.20., இன்று கடலூர் மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் "மலரட்டும் மணிமுத்தாறு" என்ற திட்டம் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கூட்டு முயர்ச்சியில் துவங்கப்பட்டு, இன்று நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அன்வர் தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 20.08.17
Author: admin
மஜக தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு.!
தூத்துக்குடி.ஆக.20., இன்று மனிதநேய ஜானநாயக கட்சியின் தூத்துகுடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் காயல்பட்டினம் நகரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் நஜிப் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிபணிகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 20.08.17
மீனவர்களுக்கான கருத்தரங்கம்..! அறிவாயுதம் நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஆக.20., அறிவாயுதம் பத்திரிகை சார்பில் சென்னையில் மீனவர்கள் நலன்காக்கும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, நீதிபதி அரிபரந்தாமன், சுப.உதயகுமார், இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் N.A.தைமியா, துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், பல்லாவரம் ஷஃபி, ஷமிம் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை 19.08.17
மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட காவல் ஆணையாளருடன் சந்திப்பு…!
திருப்பூர்.ஆக.19., இன்று திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த அமைத்திக்கான கூட்டம் மாவட்ட கமிஷ்னர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் நிறைவு பெற்றதும் தனிப்பட்ட முறையில் கமிஷனர் நாகராஜ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். திருப்பூரில் தற்போது நிலவும் போக்குவரத்து நெருக்கடி, சட்டம் ஒழுங்கு, சமூக அவலங்கள் குறித்த முக்கிய மூன்று கோரிக்கைகளை நேரடியாக ஆணையாளரிடம் தெரிவித்தனர். இது குறித்த தகவல்களை ஆச்சரியத்துடன் கேட்ட ஆணையாளர். அருகிலிருந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டு உறுதி படுத்திக்கொண்டார். நீங்கள் குறிப்பிட்ட மூன்றுமே முக்கியமான கோரிக்கைகள், இதில் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என தனி குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார். தொடர்ந்த ஆணையாளர் அவர்கள் மஜக நிர்வாகிகளிடம் இது குறித்து விரைவில் நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் அபுதாஹீர், J.மீரான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் காதர் கான் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருப்பூர் மாவட்டம். 19_08_2017
தமிழக காவல்துறை தலைவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!
சென்னை.ஆக.19., தமிழக காவல்துறை தலைவர் (DGP) திரு.ராஜேந்திரன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சந்தித்தார், அவர்களுடன் மாநில துணை செயலாளர்கள் N.A.தைமியா, A.சாதிக் பாஷா ஆகியோர் சென்றனர். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சங்பரிவார் அமைப்புகள் சில இடங்களில் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்த கூடிய அபாயமுள்ள இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மை மக்கள் வாழுமிடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தீயசக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மஜக சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்ரீத் பண்டிகையொட்டி ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்க சில தீய சக்திகள் இடையூறு கொடுக்காத வண்ணம் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும், வாகனங்களில் கால்நடைகளை கொண்டு செல்லும் போது தடுக்க முயலும் தீய சக்திகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது. பிறகு SBCID, உளவுத்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் சந்தித்து இது குறித்து விரிவாக பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம், சென்னை. 19.08.17