புருனே. ஆக.22., தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான புருனே (தாருஸ்ஸலாம்) நாட்டுக்கு இன்று மதியம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வருகை தந்தனர். கோலாலம்பூர் வழியாக வருகை தந்த அவர்களுக்கு புருனே விமான நிலையத்தில் புருனே மஜக சகோதரர்கள் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து 5 நாட்கள் புருனேயில் தங்கி, இந்திய சகோதரர்கள் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் சூழலில் ,அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் புருனேயில் இருக்கும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுடன் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தொடர்புக்கு: 8906959 (தாஹா) 8366160 (ஜாஹிர் ஹுசேன்) தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING புருனை மண்டலம் 22_08_17
Author: admin
மஜக தலைமை நியமன அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் (வடக்கு) நிர்வாகிகளாக கீழ்கண்டோர் அறிவிக்கப்படுகின்றனர். மாவட்டசெயலாளர் : K.செய்யது அலி த/பெ.காதர் ராவுத்தர் #2/1A, பள்ளிவாசல் மேலத்தெரு, கயத்தார், தூத்துகுடி வடக்கு மாவட்டம், அலைப்பேசி : 9487801567. மாவட்ட பொருளாளர் : A.மைதின் த/பெ.அப்துல்சலாம் 8/23நடுத்தெரு மானங்காத்தான் தூத்துகுடி வடக்கு மாவட்டம். அலைப்பேசி : 8220030076 இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் மனிதநேய சொந்தங்களும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவண், எம். தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 22-08-2017
சென்னை மாநகர கமிஷனருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா சந்திப்பு..!
சென்னை.ஆக.22., வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாதுகாப்பை பலப்படுத்தக் கோரியும், ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையில் ஆடு, மாடு பலியிடுவது சம்பந்தமாகவும் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சென்னை மாநகர கமிஷனர் A.K. விஸ்வநாதன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்கள் சந்தித்து உரையாடினார். பின்னர் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அவருடன் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர்கள் பீர் முஹம்மத், ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், IKP மாவட்ட செயலாளர் வருசை கனி, துணை செயலாளர் ஜெய்னுலாபுதீன், துறைமுக பகுதி துணை செயலாளர் பஜார் அபூபக்கர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம், சென்னை 21.08.17
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இளையராஜா குடும்பத்திற்கு மஜக மாநில பொருளாளர் ஆறுதல்…!!
சிவகங்கை.ஆகஸ்டு.21., ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா ஆவார். கடந்த 13.08.2017 அன்று இந்திய எல்லையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சகோதரர் இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் இளையராஜாவின் தாயார், சகோதரி, மனைவி ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். இளையராஜா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி 3 மாதம் கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கண்டனிக்கு வந்து தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்ற நிலையில், (13.08.2017) அன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். எம்.பி.ஏ., எம்.பில்., படித்துள்ள இளையராஜாவின் மனைவிக்கு அரசு வேலை கிடைத்திட உதவி செய்யுமாறு அவரின் உறவினர்கள் மஜக பொருளாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு..! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தூத்துக்குடி.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு நேற்று (20.08.2017) மாலை 8 மணி அளவில் மாணம்காத்தான் சமுகநலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. சிறப்புஅழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்புகுழு தலைவர் சையது அலி தலைமையில் பொருப்புகுழு நிர்வாகிகள் காஜா முஹம்மது, ராஜா, முஹம்மது பைசல், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் தூத்துகுடி, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்சியில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சியின் வளர்ச்சி பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி 21.08.2017.