கோவை.ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்கு பகுதியின் செயற்குழு கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று மாலை பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் நிவாஸ், யூசுப், ஜக்கிரியா, சிராஜ், ரஹ்மத்துல்லா, ஜாபர் அலி, அபு, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... 1. தெற்கு பகுதிக்குட்பட்ட அனைத்து கிளைகளுக்கும் பகுதி நிர்வாகிகள் தலைமையில் கண்காணிப்பாளர்கள் நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது, 2. தெற்கு பகுதியில் விரைவில் கொடியேற்று விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, 3. கட்சியின் வளர்ச்சி பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆகிய மூன்று தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 25.08.17
Author: admin
குடியாத்தம் ஒன்றிய மஜக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் சந்திப்பு….
வேலூர்.ஆக.25., குடியாத்தம் ஒன்றிய காத்தாடி குப்பம் காயிதே மில்லத் நகர் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜகவின் வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் கலந்து கொண்டார். காயிதே மில்லத் நகர் பிரச்சினைகள் சம்பந்தமாக பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்டனர். உடன் ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள், மஜக ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ், நகர செயலாளர் S.அனீஸ், ஒன்றிய பொருளாளர் அமீன், ஒன்றிய துணை செயலாளர் அம்ஜத், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்ரான், நகர துணை செயலாளர் N.சலீம் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம் வேலூர் (மே)மாவட்டம். 25.08.17
புருணையில் இந்தியர்களின் ஒன்று கூடல்!
புருணை.ஆக.25., புருணை தாருஸ்ஸலாமில் இன்று (25.08.2017) இந்திய சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி தேனீர் விருந்துடன் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA , மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் #மொவ்லா_நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.. மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹாஜி.மாலிக் அவர்கள் தலைமைஏற்று சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் தேனீர் விருந்துக்கு பிறகு கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.. மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கூறும்போது இதற்கு முன்பு இருமுறை புருணைக்கு வந்திருந்தோம், இம்முறைதான் அதிகமான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்திய சமூகத்தினர் பெருமளவில் வரவேற்பு கொடுத்ததாகவும், இது மனதுக்கு நிறைவாக இருந்ததாகவும் கூறினார். ஞாயிற்று கிழமை அல்லாது வெள்ளிகிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகமான பிரமுகர்கள் பங்கேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது என்றார்கள். தகவல்: MKP ஊடக பிரிவு, புருணை மண்டலம் 25_08_17
கடலூர் வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு!!
கடலூர்.ஆக.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 25/08/17 வெள்ளி நெய்வேலியில் எம்.பி.ரெசிடன்சி ஹாலில் (Mp residency hall) காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றியும், கடலூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார், இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கடலூர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்வர்தீன், ஷாஜகான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜிஸ், அஜ்மீர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், ஹாஜி முஹம்மது மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து
மஜக வேலூர் (கி) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…
வேலூர்.ஆக.25., வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாக இன்று JJ நகரில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி கிளைச்செயலாளர் நசீருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் S.முஹம்மத் ஜாபர் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். பின்பு காட்பாடி சித்தூர் ரோட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் H.ரபீக் ரப்பானி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் வசீம், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும் கணியம்பாடி ஒன்றியம், காட்பாடி, T.K.புரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_ தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 25.08.2017