சென்னை.ஆக.29., மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார். இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை. 28.08.17
Author: admin
IKP ரியாத் மண்டலதுணை_ செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவுத் அவர்களை நேரில் சந்தித்து மஜக பொதுச் செயலாளர் ஆறுதல்..
IKP ரியாத் மண்டலதுணை செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனார் ஹாஜா அவர்கள் கடந்த சில தினங்கள் முன்பு மரணமடைந்தார்கள். அவர்கள் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சகோதரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி, #IKP_IT_WING #ரியாத்_மண்டலம் 27-08-2017
திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!
திருப்பூர்.ஆக.28., திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் போராடும் மாணவர் இந்தியா அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர்.. தகவல்; மாணவர் இந்தியா ஊடக பிரிவு திருப்பூர் மாவட்டம் 27-08-2017
நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு MLA நிதியிலிருந்து ரூ.2லட்சம் மதிப்பில் 10 தண்ணீர் பம்புகள்…
நாகை.ஆக.27., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் (2017-18) தொகுதி நிதியிலிருந்து 10 கை பம்பு & தரை தளம் அமைக்க ரூபாய் 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பம்புகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இப்பணிகளை பாராட்டி ஊர் பொதுமக்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அலுவலகத்திற்கு அலைப்பேசியின் மூலம் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 27.08.2017
மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
திருப்பூர்.ஆகஸ்ட்.27., இன்று மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார், இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் காதர்கான், மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், வெங்கமேடு மீரான், பெரியதோட்டம் அப்பாஸ் ஆகியோருடன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் மற்றும் திருப்பூர் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தற்போது மக்கள் மத்தியில் மஜகவிற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை முறையாக பயன்படுத்தி கட்சிக்கான உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும், வரும் வெள்ளிக்கிழமை அன்று புறநகர் பகுதியில் நிர்வாகம் அமைக்க வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #திருப்பூர்_மாவட்டம். #MJK_IT_WING 27_08_2017