சென்னை.செப்.02., இன்று இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை ( IKP) சார்பாக ஈஃதுல் அள்ஹா என்ற தியாகத் திருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை சென்னை ஐஸ்ஹவுஸ் லேடி வெல்லிங்டன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. டாக்டர் KVS ஹபீப் முகம்மது அவர்கள் பெருநாள் (குத்பா) உரையாற்றினார். பெருநாள் திடல் தொழுகைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். -IKP ஊடகப்பிரிவு தலைமையகம், சென்னை.
Author: admin
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் மஜகவின் முப்பெரும் விழா..!
திருப்பூர்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் D.காளிபாளையத்தில் நேற்று மாலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு, தெருமுனை பிரச்சாரம் கொடியேற்றுவிழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மஜக மாவட்ட செயலாளர் திருப்பூர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகிக்க, இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக மாநில செயற்குழு உறுப்பினர் பெங்களூர் K.M.J.பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்ததாக உரையாற்றிய திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள். நெருப்பில் பூத்த புரட்சி மலராம் மஜக தோன்றிய காரணங்களையும், அது குறுகிய காலத்தில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வெற்றி வாகை சூடி வருவதையும் எடுத்துரைத்தார். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். கொடியேற்றம் நிகழ்வு ஊர்பெரியவர்கள் முன்னிலையில் ஊரின் முக்கிய சந்திப்பில் பொதுமக்களின் ஆதரவோடு கரவொலிக்களுக்கு மத்தியில் மாவட்ட செயலாளர் ஹைதரலி அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். அதன் பின் நடந்த நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் D.காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நியமனம்
டாக்டர் அ.சேப்பன் மறைவு.! மஜக இரங்கல்..!!
(மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவு..) இந்திய குடியரசு கட்சியின் (கவாய்) முன்னாள் பொதுச் செயலாளரும், சமூக நீதி போராளியுமான டாகடர்.அ.சேப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், பிற்படுத்தப்பட்டோர், சிறும்பான்மையினர் உள்ளிட்ட அனைவரின் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட போராட்டவாதி அவர். தன்னை தேடி வரும் நோயாளிகளுக்கு 10 ரூபாயில் வைத்தியம் பார்த்த மனிதநேயர். டாக்டர்.ராமதாஸ், ஷஹீத் பழனிபாபா உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து அவர் நடத்திய சமூக நீதிக்கான போராட்டங்கள் மறக்க முடியாதவை.. " புராண விடுதலை பெற இஸ்லாமிய மார்க்கமே தீர்வு " என்ற அவரது நூல் தமிழ் சிந்தனை உலகில் பெரும் வரவேற்பை பெற்றது. வயது முதிர்ச்சியால் காலங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர் இன்று நம்மிடம் விடைபெற்றிருக்கிறார். அவரது பணிகளை சமூக நீதி போராளிகள் முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். இவண். M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 01.09.17
மாணவி அனிதா தற்கொலை! மஜகவின் இரங்கல் அறிக்கை.!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) நீட் தேர்வில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அன்புத் தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை தருகிறது. அனிதா அவர்கள் தன் சக மாணவ, மாணவிகளுடன் சட்டமன்ற விடுதிக்கு வந்து என்னையும், சகோதரர் தனியரசு MLA , கருணாஸ் MLA அவர்களையும் சந்தித்து பேசினார். நாங்கள் இது குறித்து தமிழக முதல்வரிடமும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் வாதிட்டோம். பள்ளிக் கல்விக்கான பொது மேடை அமைப்பின் தலைவர் தோழர் . பிரின்ஸ் கஜேந்திரன் அவர்களுடன் டெல்லி சென்று உச்சநீதிமன்றம் வரை அனிதா போராடினார். சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் கொள்கைகளின் காரணமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவ சமுதாயம் ஏமாற்றப்பட்டு விட்டது. அந்த விரக்தி காரணமாக இன்று தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த குடிசை வீட்டு தங்கையின் கனவும் பொசுங்கிவிட்டது. அவரது வாழ்வு கடும் துயரில் முடிந்திருக்கிறது. அதிகார திமிரில் இருப்பவர்கள் இந்த அநீதிக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதற்கு முழுக்க , முழுக்க மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதே சமயம் தமிழக
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி..) உலகெங்கும் 200 கோடி மக்களால் கொண்டாடப்படும் " ஈதுல் அல்ஹா " எனும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். நபி இப்ராகிம் (அலை...) அவர்கள் தவமிருந்து பெற்ற தனது அருமை புதல்வர் நபி இஸ்மாயில் (அலை..) அவர்களை தான் கண்ட இறை கணவின்படி, நரபலி கொடுக்க முனைந்தார் அப்போது அதை தடுத்துநிறுத்த ஒரு ஆட்டை பலியிட இறைவனிடமிருந்து ஆணை வந்தது. அந்த நரபலியை தடுத்து மனிதம் காத்திட்ட நிகழ்வின் பின்னணியாலயே இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. உலக அதிசயங்களில் அதிசயமாக போற்றப்படும் ஜம்ஜம் தண்ணீரின் வரலாறும் இதனையொட்டியே தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புனித மெக்காவில் உலக முஸ்லிம்கள் இத்திருநாளையோட்டி லட்சக்கணக்கில் குழுமி மனமுருகி பிரார்த்திக்கிறார்கள். தேசம், இனம், மொழி, சாதி வேறுபாடுகளை உடைத்திட்டு சகோதர, சகோதரிகளாக ஒன்றுகூடும் மானுட வசந்தமாக இந்நிகழ்வு போற்றப்படுகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கொண்டாடும் இப்பண்டிகையில் சகோதர சமுதாய மக்களும் பங்கேற்று வாழ்த்துக்களை பரிமாறும் இனிய பண்பாடு தொடர்வது இப்பண்புகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. தியாகங்கள் வரலாறுகளை உருவாக்குகிறது. அதை நினைவு கூறும் இந்நாளில், உலகெங்கும் அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் புத்துக்குழுங்க இறைவனிடம் பிரார்த்திப்போம். நம்