சென்னை. டிச.11., நேற்று ஆற்காடு நவாப் முஹம்மத் அலி அவர்களுடன் மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கூடம் சம்மந்தமாக சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் அப்போலோ ஹனிபா,முன்னால் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் Ex.MP, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் NA.தைமியா, சீனி முஹம்மது,SDPI தெஹ்லான் பாகவி, PFI அன்சாரி ஆகியோர் கலந்துரையாடினர். இதில் மதரஸா-இ-ஆஸம் சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கல்விக்கூடங்கள் கட்டுவதற்க்காக செலவு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். அப்போலோ ஹனிபா அவர்கள் ஆற்காடு நவாப் முகம்மது அலி அவர்களிடம் கூறும் போது மஜகவின் முயற்ச்சியால் தான் முதன்முதலில் அந்த போராட்டம் நடைபெற்றது என்றும் அதனை தொடர்ந்து மற்றவர்கள் வந்தார்கள் என்ற தகவலை தெரிவித்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை
Author: admin
அதிரையில் மஜக ஆலோசணைக் கூட்டம்.
தஞ்சை.டிச.11., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசணைக் கூட்டம் நேற்று 10/12/2017 சனிக்கிழமை மாலை நகர அலுவலகத்தில், நகர செயலாளர் செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹமது அவர்கள் முன்னிலையில் தமுமுக முன்னாள் களப்போராளி ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து நகர நிர்வாகம் கட்டமைப்பு, அனைத்து வார்டுகளிலும் கிளைகள் அமைப்பது, சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களை கட்சியில் இணைப்பது, போன்றவை விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக மருத்துவ அணி செயலாளர் சமீர் அவர்கள் நன்றியுரை கூறி கூட்டம் நிறைவுற்றது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெ_மாவட்டம் 10.12.2017.
முப்பெரும் விழா மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
மயிலாடுதுறை.டிச.10., நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடி ஜமாத்தார்கள் ஒருங்கிணைத்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஜமாத் பெரியவர்கள் இளைஞர்களை வழி நடத்துவது குறித்தும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார். இந்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தமுமுக நிறுவனர் குணங்குடி அனிபா அவர்கள், முஸ்லிம் லீக் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவர் இனாயத்துல்லா, மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களும் பங்கெடுத்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம் 10.12.17
மஜக நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தந்தை மரணம்..! மாநில நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்..!!
நாகப்பட்டினம்.டிச.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹமீத் ஜெஹபர் அவர்களின் தந்தை இன்று (10.12.17) மரணமடைந்தார்கள். மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, இணை பொதுச்செயலாளர் K.M.மைதின் உலவி, துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகை சதகத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம் 10.12.2017.
வேலூர் ஜிட்டப்பள்ளியில் மஜக கிளை உதயமானது…! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள் !
வேலூர் மே டிச,.10.குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் பைரோஸ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ்,மற்றும் ஆம்பூர் T.R.முன்னா ( எ) நஸிர் கலந்து கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளி புதிய கிளை உதயமானது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் மஜக கொடியை ஏற்றி வைத்தார். 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இதில் முன்னால் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்மு தீன், ஆம்பூர் நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹம்த், சரவணன், கலீம், அபுல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மே_மாவட்டம் #குடியாத்தம்_நகரம் 10.12.2017