சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய "உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்" என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண களஞ்சியமாக இந்நூல் தெரிகிறது. இந்நூல் விற்ப்பனையை மஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் உள்ளிடயோர் பங்கேற்றனர். இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புகொள்க கபீர் - 04443514550 தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
Author: admin
திண்டிவனம் நகரில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி..!
விழுப்புரம்.டிச.16., இன்று திண்டிவனத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை - திண்டிவனம் பை-பாஸ் சாலையில் மஜக கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செயற்குழுவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் கடந்து செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் மண்ணை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி ஆகியோர் இருந்தனர். உடன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R.ஆதம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் "திண்டிவனம்" M.K.ஷாஹூல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன், நகர துணை செயலாளர் H.அப்சர் பாஷா, நகர பொருளாளர் M.தமிமுன் அன்சாரி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் கலீம் பேக், நகர இளைஞர் அணி செயலாளர் V.கணேஷ் பாபு, நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் A .அமீர், S.இஸ்மாயில், நகர தொண்டர் அணி செயலாளர் ஆசிப்கான், மாணவர்
ஆம்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
வேலூர்.டிச.17,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர 3-வது வார்டு சார்ந்த சகோதர் அஃபான் தலைமையில் இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் TR. முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும் நகர துணை செயலாளர் முன்னா, இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி துணை செயலாளர் முதர்ஸீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 15.12.2017
அண்ணன் A.S.அலாவுதீன் மஜகவில் இணைந்தார்…!
சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெயினுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா, சாதிக் பாட்ஷா, சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்சியில் இணைந்து தலைமை நிர்வாக குழுவி்ல் இடம் பெற்ற J.S.ரிபாய் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், சீனி முஹம்மது ஆகியோரும் பங்கேற்ற தலைமை நிர்வாக குழு இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது அதன் பிறகு இந்த இணைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை 15.12.17
கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!
கோவை.டிச.14., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும் ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும், அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் மஜகவின் பணிகளால் ஈர்க்கப்பட்டு தன்னெழுச்சியாக சகோதரர்கள் I.அப்துல்ஹக்கீம், S.கரீம், H.சையதுரஹீம், H.செய்யதலி, U.அப்துல்முனாப், I.அக்கீம் ஆகியோர் கோவை மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா.இஷாக், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, தெற்கு பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் அன்வர், காஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்... விரைவில் வால்பாறையில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 14.12.17