நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து..! நெல்லையில் மஜக ஆர்ப்பாட்டம்…!!

ஜூன்.20.,

“நபிகள் நாயகம்” (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் அதை அமோதித்து சமூக வலைதளத்தில் எழுதிய நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்து.

நெல்லை மாவட்டம், பேட்டையில், முனிசிபல் பேருந்து நிறுத்தத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPI மாவட்ட செயலாளர் தோழர் காசிவிஸ்வநாதன், விசிக மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், IUML தென்மண்டல் இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது கடாபி, தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் நெல்லைதமிழரசு, மதிமுக நெல்லை பகுதி செயலாளர் கோல்டன்கான், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் திருகுமரன், தமிழர் உரிமை மீட்புகளம் ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் கென்னடி, RP மக்கள் நல அமைப்பு தலைவர் சேவத்தா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இக்கூட்டத்தில் மஜக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மன்சூர்அலி, மாவட்ட நிர்வாகிகள் N.அப்பாஸ், புகாரி, முருகேசன், நெல்லை ஜாகிர், டில்லி சம்சுதீன் மற்றும் பகுதி, நகரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்டனத்தை பதிவுசெய்தனர்.

மஜக பேட்டை நகர செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
19.06.2022