சிதம்பரத்தில் பொதுக்கூட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூன்;29.,

வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்திய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் CJAF கூட்டமைப்பு சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் K.S.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் பிரமுகர் இதாயத்துல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் உரையாற்றினர்.

இதில் பொதுச் செயலாளர் அவர்களோடு , மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் . தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரபீக், இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாநில பொருளாளர் அமீது ஜெகபர், ஒன்றிய செயலாளர் ஹாஜா மெய்தீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
28.06.2022