குவைத் MISK இப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

குவைத்:ஏப் 14 வளைகுடா பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்கள் குவைத் வருகை தந்தார். அவருக்கு குவைத் மனிதநேய கலாச்சார பேரவையினர் (MKP) விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று இரவு முதல் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சகோதரர்கள், பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகின்றனர்.

இன்று மாலை குவைத்தில் தமிழக தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் பெரும்பான்மையாக பங்கேற்ற Misk பள்ளி இப்தார் நிகழ்வில் உரையாற்றினார்.

அவருக்கு மிஸ்க் அமைப்பின் தலைவர் மெளலவி முனிர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

அங்கு அவர் பேசிய உரையின் முக்கிய பகுதியில் பின்வருமாறு..

தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து உழைக்க வந்திருக்கும் நீங்கள் பொது சேவையில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக மேம்படவேண்டும் எத்தனை நாட்களுக்குதான் தொழிலாளர்களாகவும், அலுவலக ஊழியராகவும் இருப்பீர்கள்?

இந்த நிலை மாறவேண்டும்.

உங்களை மேலும் முன்னேற்றுவதில் திட்டமிடவேண்டும்.

புதியவற்றை கற்றுகொள்ளுங்கள். மாறிவரும் புதிய உலகின் போட்டிகளுக்கு உங்களை தயார் படுத்துங்கள்.

இந்த உலகம் பரந்து விரிந்தது வளைகுடாவில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது

ஏழையாக பிறந்தது குற்றமில்லை, ஏழையாக இறப்பதுதான் குற்றம் என்றார் தொழிலதிபர் பில்கேட்ஸ்.

நீங்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து செல்வந்தர்களாக உயர்வது என்பது உங்களுக்காக மட்டும் அல்ல…

உங்களை சுற்றி வாழும் அனைவருக்கும் அது பலனளிக்கும் என்பதை மறவாதீர்.

எனவே பொருளாதாரத்தில் உயர்வது குறித்தும், மேம்பாடு அடைவது குறித்தும் சிந்தியுங்கள் திட்டமிடுங்கள்.

அதுபோல் உங்கள் பிள்ளைகளையும் சமூக சிந்தனையுடன் வளர்த்திடுங்கள்.

அவர்களை மார்க்க அறிவுடனும், பொது அறிவுடனும் வளர்த்திடுங்கள். அவர்களிடம் நல்லிணக்க சிந்தனைகளை ஊக்குவிங்கள்.

அடுத்த தலைமுறையை ஆற்றல் மிகு தலைமுறையாக உருவாக்க கவனம் செலுத்துங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரையில் MISK அமைப்பினர்களை பாராட்டி வாழ்த்து கூரினார்.

அங்கு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.

அவர்களில் அனேகமானோர் பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் அவர்களோடு குவைத் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ், மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது, மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கதுல்லா, மண்டல துணை செயலாளர்கள் மாயவரம் சபீர், ஆயங்குடி நாசர், மண்டல வணிகரணி செயலாளர் SSநல்லூர் யாசின், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் அம்மாபேட்டை சையது அபுதாஹீர், நாகை இப்ராஹீம், நாச்சிகுளம் அப்துர் ரஹ்மான் மற்றும் வேலம்புதுகுடி சர்புதீன் ஆகியோர் பங்கெடுத்தனர்.

தகவல் :

#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#mjkitwing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#குவைத்_மண்டலம்
14.04.2022