
இன்று நீலகிரி மேற்கு மாவட்டத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.
அப்போது மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஜாவீத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இம்மாதம் கூடலூர் பகுதியில் நடைபெற உள்ள கட்சி கொடியேற்று நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு நாள் அரசியல் பயிலரங்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் பட்டா பிரச்சனைகள் குறித்தும், வனத்துறைக்கும், மக்களுக்கிடையேயுமான நிலவியல்- நிர்வாக சிக்கல் குறித்தும் பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜோசப், முஹம்மத் முஜீப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேவர் சொலை பஞ்சாயத் கவுன்சிலர் கிரிஜா ஜோசப் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
05.09.2023