கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!!

கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..!

குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!!

கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!!

தோஹா.ஜன.22., கத்தார் நாட்டில் நடைபெறும் தொழில் முதலீட்டார்கள் கருத்தரங்கம் மற்றும் கத்தார் நாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றம் போன்ற விசயங்களில் கலந்துகொள்ள குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை செயலாளர் முத்துகாப்பட்டி. ஹாஜா மைதீன் அவர்கள் வெல்டன் ரியல் புரோமோடர்ஸ் நிறுவனர் முகம்மது கவுஸ் அவர்கள், வேல்டு ஹலால் டெவலப்மெண்ட் சேர்மன் முகம்மது ஜின்னா அவர்கள் ஆகியோர் வருகைதந்தனர்.

அவர்களுடன் கத்தார் MKP மண்டல செயலாளர் முஹம்மது உவைஸ் , ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டல ஆலோசகர் கீழக்கரை ஹுசைன் , வர்த்தகர் அணி செயலாளர் ஷேய்க் மொஹிதீன், மக்கள் தொடர்பு செயலாளர் செய்யது கனி ஆகியோர் மரியாதையை நிமித்தமா சந்தித்து கலந்துயுரை யாடினார்.

இந்த சந்திப்பில் பல்வேறு தொழில் முன்னேற்ற  விஷயங்கள் பரிமாறப்பட்டன. பிப்ரவரி 16 இல் கத்தார் MKPயினர் நடத்தும் “திருப்புமுனை மாநாட்டுக்கு” அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இறுதியாக MKP நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்த விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர்.

தகவல்:
#MKP_ஊடக_பிரிவு
#MKP_கத்தார்_மண்டலம்