மஜக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக கூட்டம்..!

வேலூர்.ஜன.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை நிர்வாகம் கடந்த 14.01.18 அன்று வேலூர்  கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அறிவித்திருந்தன.

இந்நிலையில் நேற்று (16-01-2018) மாவட்ட  நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர்  முஹம்மத் யாஸீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர்  ரபீக் ரப்பானி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், கஸ்பா ஏஜாஸ் , சையத் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிவாகிகளாக நியமனம் செய்யப்பட்டதற்கு தலைமை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

முதல்கட்டமாக அணிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைசெய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
16.01.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.