மஜக பொருளாளருடன் SDPI வழக்கறிஞர்கள் சந்திப்பு..!

image

image

சென்னை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு SDPI கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் M.M.அப்பாஸ் அவர்கள் வருகை தந்தார்.

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை அப்பாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சந்தித்து தமிழ்நாடு பார் கவுன்சிலிங் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டினர்.

இச்சந்திப்பின் போது மஜகவின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள்  புதுமடம் அனிஸ், முஹம்மது  சைபுல்லாஹ் , SDPI கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளருமான ராஜா முகம்மது , உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நஃவில், தமிம் மற்றும் ஷேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை
12.01.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.