கவர்னர் உரையை புறக்கணித்து… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளிநடப்பு!

image

சென்னை. ஜன.08., இன்று தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையாற்ற தொடங்கியபோது, எதிர்கட்சிகள் எழுந்து வெளிநடப்பு செய்தனர்.

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளிநடப்பு செய்து பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது…

மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக, மரபுகளை மீறி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் கவர்னரின் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

மேலும்,  ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை
“தேசிய பேரிடர் பாதிப்பு” மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம்.

அதுபோல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 159 படகுகளையும், மீனவர்களையும் இலங்கை அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. அதை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

இவ்விரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் தமிழக கவர்னரின் உரையை மூன்று காரணங்களின் அடிப்படையில் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்!

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#சென்னை.
08.01.18