மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்…!

image

புதுகை. ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி வர்த்தகர் சங்க அரங்கில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது காலித், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் அப்துல் ரஜாக், அறந்தாங்கி நகர செயலாளர்  ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், திருவரங்குளம் ஒன்றிய பெர்ருளாளர் முகமது அப்துல்லாஹ், கீரமங்களம் நகர செயலாளர் முகமது புர்கான், கீரமங்களம் நகர பொருளாளர் இராஜேந்திரன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் சைய்யது அபுதாஹிர், அவுடையார் கோவில் ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது உசேன், மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி  ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து வழிமொழிந்து நிறைவேற்றினார்கள்.

தீர்மானங்கள்..

1) முத்தலாக் தடை சட்டம் கண்டனத்திற்குரியது..

மத்தியில் ஆளும் பா. ஜ. க அரசால்  மக்களவையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் இந்திய அரசியல் சாசனம் வழக்கியிருக்கும் உரிமையியல் சட்டத்திற்கு எதிரானது. 1500 ஆண்டுகளாய் நடைமுறையில் உள்ள முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் அல்லது குறைந்த பட்சமாக முஸ்லிம் பிரநிதிகள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் கண்டிக்கத்தக்கது இச்சட்டத்தில் குற்றம் நிரூபிக்கும் வழிமுறைகள் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி மற்றும் நிவாரணம் கிடைக்க எந்த உத்திரவதமும் இல்லை என பல குறைபாடுகளை கொண்டதாக உள்ளது.  அனைத்திற்கும்  மேலாக இந்திய சிவில் சட்டத்தை மத துவேஷ எண்ணத்தோடு கிரிமினல் குற்ற சட்டமாக மாற்றுவது கண்டனத்திற்குரியது.

2) 10 வருட சிறைவாசிகள் விடுதலை  தமிழக அரசுக்கு நன்றி…

மனிதநேய ஜனநாயக  கட்சி பொதுச்செயலாளர் மாண்புமிகு  சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்ஸாரி அவர்கள்  சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை பரிசிலித்து முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை  ஒட்டி தமிழக சிறைகளிள் உள்ள 10 வருடத்தை அடைந்த அனைத்து  சிறைவாசிகளையும் விடுதலை என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்ட  தமிழக முதல்வர் எ.பழனிச்சாமி அவர்களுக்கும் அவரின் தலைமையில் செயல்படும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

3) அறந்தாங்கி வார செவ்வாய் சந்தை வியாபாரிகளுக்கு  நிரந்தர தீர்வு வேண்டும்…

புதுக்கோட்டையின் இரண்டாவது நகரமாக இருப்பது அறந்தாங்கி, இங்கு இயங்கி வரும் அறந்தாங்கி வார சந்தை ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. தஞ்சை சத்திரம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வார சந்தை நிர்வாகம் இந்த இடத்தை முறையாக செப்பனிட்டு பராமரிக்கவில்லை.

நிரந்தர கடைகளை அமைத்துத்தரவில்லை. எனவே மாவட்ட வருவாய் நிர்வாகமும் தஞ்சை சத்திரம் நிர்வாகமும் இணைந்து அறந்தாங்கியில் அண்ணாசிலை முதல் இரயில் நிலையம் சாலை வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், ஏழை தரைகடை வியாபாரிகள் பாதிக்காதவண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இதுவாரை உள்ள நிலைபோல தரைகடை வியாபாரிகளை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது  அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
01.01.2018