மஜக திண்டுக்கல் மாவட்ட பொறுப்புக்குழு கூட்டம்..!

image

திண்டுக்கல்., ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட புதிய பொருப்பு குழுவின் நிர்வாக கூட்டம் பொருப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!!!

1) பொதுசிவில் சட்ட பிரச்சனைக்கு இஸ்லாமியர்களின் உலாமாக்கள் சபையின் சார்பாக (05/01/2018) நடக்க இருக்கும் கண்டன பொது கூட்டத்திற்க்கு நம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அதிகமானோர் கலந்து கொண்டு நமது எதிப்பினை மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது.

2) 22 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோவை ஜபருல்லா, கோவை அபூ (எ) அபுதாஹீர், திண்டுக்கல் மீரான் மைதீன், ஆகியோர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நீதிமன்றம் உத்தரவிட்டும். இதை அமல்படுத்த மறுக்கும் சிறை துறை நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

3) திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரம் முதல் சிலுவத்தூர் ரோடு வரையிலும், தாடிக்கொம்பு ரோடு மேம்பாலம் இவை இரண்டையும் போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.

4) (05/01/2018) அன்று நடக்க இருக்கும் ஆர்பாட்டத்திற்க்கு கண்டன உரை ஆற்ற வரவிருக்கும் நமது கட்சியின் பொதுச்செயலாளரும், MLA _வும் ஆன M.தமிமுன் அன்சாரி அவர்களை வரவேற்று பிளக்ஸ் மற்றும் வால்போஸ்ட்டர் பணிகள் செய்வதென இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது.

5) முன்னால் இருந்த நிர்வாகம் ஏற்ப்படுத்திய கிளைகளின் நிர்வாகிகளை சந்திப்பதென தீர்மானிக்கப்பட்டது.

6) மேலும் கட்சியின் பொறுப்பு குழுவில் இருக்கும் நாம் மேலும் பல புதிய கிளைகள் அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்,
31/12/2017.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*