டிசம்பர் எழுச்சி தொடர்கிறது…! திருவண்ணாமலையில் 250 பேர் மஜகவில் இணைந்தனர்..!!

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுகவில் முன்பு செயல்பட்டு கொண்டிருந்தவர்கள் 200 பேரும் இதர கட்சிகள்,  அமைப்புகளை சர்ந்த 50 பேரும் இன்று (16/12/2017) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி  முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

முன்னதாக 100க்கும் மேற்பட்ட கார்கள், பைக் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

மாவட்டம் முழுவதிலிமிருந்து ஷபீர் அகமது தலைமையில் வருகை தந்தவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஹாஜா செரீப் வரவேற்று பேசினார்.

அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் R.K.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதை சட்டம் போட்டு, திட்டம்போட்டு தடுக்க முடியாது என்பது நடைமுறையில் தெரிந்துவிட்டது, பொதுமக்கள் சுயமறியாதை உணர்வுடன் செயல்பட்டு பணம் வாங்கமாட்டோம் என சத்தியம் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

கவர்னர் அவர்கள் கக்கூஸை ஆய்வு செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என மற்றொரு கேள்வியை எழுப்பினர்.

கவர்னர் தன் எல்லைக்குள் நின்று செயல்பட வேண்டும். அவர் வரம்பு மீறக்கூடாது. அவர் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கோப்புகளை பார்க்க வேண்டும். நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டும். மாறாக கக்கூஸை ஆய்வு செய்வது அவரது வேலை அல்ல என்றார்.

பாஜகவினர் வரம்பு மீறி பேசுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் என அடுத்த கேள்வியை எழுப்பினர்.

இது ஒன்றும் குஜராத் அல்ல, பொறுப்பான அதிகாரத்தில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி, மாவட்ட பொருளாளர் செய்யது முஸ்தபா மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்