கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!

image

image

கோவை.டிச.14., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும்  ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள்.

அரசியல் பக்கமே வராதவர்களும், அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர்.

பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் மஜகவின் பணிகளால் ஈர்க்கப்பட்டு தன்னெழுச்சியாக சகோதரர்கள் I.அப்துல்ஹக்கீம், S.கரீம், H.சையதுரஹீம், H.செய்யதலி, U.அப்துல்முனாப், I.அக்கீம் ஆகியோர் கோவை மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா.இஷாக், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, தெற்கு பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் அன்வர், காஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்…

விரைவில் வால்பாறையில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
14.12.17