குடியாத்தம் நகரத்தில் டாம்கோ கடன் திட்ட துவக்க விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

image

image

image

வேலூர்.டிச.13., வேலூர் மாவட்டம்  சிறுபான்மையினருக்கான
கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ)கடன் திட்டங்களுக்கான  கடன் விண்ணப்பங்கள் வழங்கும் விழா குடியாத்தம் வட்டத்தில் இன்று  (13.12.2017)  குடியாத்தம் MBS நகர் திருமண மண்டபம் அஞ்சுமன் தெரு நடுப்பேட்டையில் மாலை 03-மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நல அலுவலர் திரு.S.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர், குடியாத்தம் வட்டாசியர் மற்றும் சிறுபான்மை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நாவஸ், மஜக நகர செயலாளர் S.அனீஸ், அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் இன்சாப் மாநில துணை செயலாளர் அலியார் அதாவுல்லா, லயன்ஸ் கிளப் தலைவர் S.கரிமுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ரஹமத்துல்லா,TMJK இஸ்மாயில், A.தாஜுதீன், ஜிலான், பீடி சங்க தலைவர் வாஹித், மற்றும் காதர் பாஷா, V.R.ரபீக், ADMK சலீம், காய்கறி வியாபாரி சங்க தலைவர் ஜாவித் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏராளமான 500 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களும் , ஆண்களும், கிறிஸ்துவர்களும்  பொதுமக்களும் கலந்து கொண்டு தனிநபர் கடன் விண்ணப்பங்களை பெற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினர் தனிநபர்  கடனுதவி சம்மந்தமாக சில கருத்துக்களை  மஜக நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள்
பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதில் மஜக நகர பொருளாளர் முபாரக் அஹ்மத், நகர து செயலாளர், சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், சாதிக், பிலால், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
13.12.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.